குஜராத் சட்டப்பேரவை தேர்தலில் காங்கிரஸ் 125 இடங்களில் வெற்றி பெறும்.. அசோக் கெலாட் நம்பிக்கை

 
வரணும்… காங்கிரஸ் தலைவரா மீண்டும் ராகுல் காந்தி வரணும்… அசோக் கெலாட் கோரிக்கை

எதிர்வரும் குஜராத் சட்டப்பேரவை தேர்தலில் காங்கிரஸ் 125 இடங்களில் வெற்றி பெறும் என்று ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலாட் நம்பிக்கை தெரிவித்தார்.

குஜராத் மாநிலத்தில் 182 உறுப்பினர்களை கொண்ட அம்மாநில சட்டப்பேரவைக்கு புதிய உறுப்பினர்களை தேர்ந்தெடுப்பதற்கான சட்டப்பேரவை தேர்தல் டிசம்பர் 1 மற்றும் 5ம் தேதி என மொத்தம் 2 கட்டங்களாக நடைபெற உள்ளது. குஜராத் சட்டப்பேரவை தேர்தலில் காங்கிரஸ் வேட்பாளர்களை ஆதரித்து ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலாட் பிரச்சாரம் செய்து வருகிறார். காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவராக அசோக் கெலாட் நேற்று செய்தி நிறுவனம் ஒன்றுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது: கோவிட் மற்றும் பொருளாதாரத்தை தவறாக நிர்வகிப்பதற்காக பொதுமக்களின் மனநிலை பா.ஜ.க.வுக்கு எதிராக இருப்பதால், இந்த  (குஜராத் சட்டப்பேரவை தேர்தல்) தேர்தல்களில் காங்கிரஸ் சிறப்பாக செயல்படும். எங்கள் கட்சி 125 இடங்களில் வெற்றி பெறுவதை பார்க்கிறது, அதை செய்ய நாங்கள் நன்றாக உள்ளோம். 

காங்கிரஸ்

பா.ஜ.க. அரசுக்கு எதிராக மக்கள் கொதிப்படைந்துள்ளனர். முழு நாடும் கோவிட்-ன் போது தவறான நிர்வாகத்தைக் கண்டது, குறிப்பாக சுதந்திரத்திற்கு முன்பே வலுவாக இருந்த மாநிலத்தில்.  மோர்பி சம்பவம் நடந்தது, உயர் நீதிமன்றத்தில் உள்ள நீதிபதி அல்லது ஓய்வு பெற்ற நீதிபதி மூலம் நியாயமான விசாரணை நடத்த  வேண்டும் என்று கோரிக்கை வைத்தோம். ஆனால் அது நடக்கவில்லை. குஜராத் உயர் நீதிமன்றம் தானாக முன்வந்து விசாரணை நடத்தியது. கள்ளச்சாராயத்தால் மக்கள் இறந்தனர். அரசாங்கத்தின் வித்தை அரசியல் வேலை செய்ய போவதில்லை, ஆச்சரியமான முடிவுகள் இருக்கும். உத்தர பிரதேச தேர்தலில் வெற்றி பெற்றதில் இருந்து, பிரதமர் மோடி-அமித் ஷா இருவரும் இங்கு (குஜராத்) தொடர்ந்து வரத் தொடங்கினர். இங்கிருந்து பா.ஜ.க. அழிந்து விட்டதாக உணர்கிறார்கள். வாரந்தோறும் இங்கு வந்தால் என்ன அர்த்தம்? அவர்களின் (பா.ஜ.க.) பலவீனமான நிலையை காட்டுகிறது. எனவே இருவரும் (மோடி-அமித் ஷா) இங்கு முகாமிட்டுள்ளனர். 

அமித் ஷா, மோடி

குஜராத் உள்பட அனைத்து மாநிங்களுக்கும் ராகுல் காந்தி யாத்திரை மேற்கொண்டு வருகிறார்.  அவர் எழுப்பும் பிரச்சினைகள் ஒவ்வொரு வீட்டாருக்கும் தெரியும். யாத்திரைக்கு முக்கியத்துவம் கொடுப்பதால், அவரால் உடல் ரீதியாக இங்கு இருக்க முடியவில்லை. அவர் இன்று (நேற்று) இங்கு வருகிறார், அவர் தனது கருத்தை சொல்வார். இமாச்சல பிரதேசத்தில் இருந்து திடீரென பிரச்சாரத்தை ஏன்  (ஆம் ஆத்மி கட்சி) விலக்கி கொண்டார்கள் என்று யாராவது கெஜ்ரிவாலை கேட்க வேண்டும்?. அவர்கள் அங்கு வேட்பாளர்களுக்கு முட்டுக்கட்டை போட்டுள்ளனர். இங்கியிருந்தும் அவர்கள் பின்வாங்கினால் யாருக்கு தெரியும்? பா.ஜ.க.வுடன் கூட்டணி வைக்கிறார்களா? அவர்கள் மீதான நம்பகத்தன்மை குறைந்து விட்டது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.