காங்கிரஸ் குறித்து ஏ.பி.சி. கூட தெரியாது.. கபில் சிபலை தாக்கிய அசோக் கெலாட்

 
கபில் சிபல்

காந்திகள் காங்கிரஸ் தலைமை பொறுப்பிலிருந்து விலக வேண்டும் என்ற கபில் சிபலை, காங்கிரஸ் குறித்து ஏ.பி.சி. கூட தெரியாது என்று அசோக் கெலாட் கடுமையாக விமர்சனம் செய்துள்ளார்.


உத்தர பிரதேசம் உள்ளிட்ட 5 மாநில சட்டப்பேரவை தேர்தல்களில் கிடைத்த படுதோல்வி காரணமாக காங்கிரஸ் கடும் சோகத்தில் உள்ளது. இந்த சூழ்நிலையில் அந்த கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரான கபில் சிபல், கட்சியின் தலைமை பொறுப்புகளிலிருந்து காந்திகள் (சோனியா, பிரியங்கா, ராகுல்) விலகி, கட்சியை வழிநடத்த வேறு ஒருவருக்கு வாய்ப்பளிக்க வேண்டும் என்று தெரிவித்தார். இதனையடுத்து கபில் சிபலை அசோக் கெலாட் உள்ளிட்ட தலைவர்கள் கடுமையாக விமர்சனம் செய்துள்ளனர்.

பிரியங்கா, ராகுல்,சோனியா

காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரும், ராஜஸ்தான் முதல்வருமான அசோக் கெலாட் இது தொடர்பாக கூறியதாவது: காங்கிரஸ் கட்சிக்கு வந்த புகழ்பெற்ற வழக்கறிஞர் சிபல். சோனியா ஜி மற்றும் ராகுல் ஜிக்கு அவருக்கு (கபில் சிபல்) நிறைய வாய்ப்புகள் வழங்கினர். காங்கிரஸின் ஏ.பி.சி. தெரியாத ஒருவர் இது போன்ற அறிக்கைகளை கொடுப்பார் என்று எதிர்பார்க் முடியாது.

கட்சியின் முதுகில் குத்திவிட்டார்… சச்சின் பைலட் ஒன்றுக்கும் லாயக்கில்லாதவர்.. அசோக் கெலாட் ஆவேசம்
காங்கிரஸ் கட்சியை முடிக்க வேண்டும் என்று பேசுபவர்கள் தாங்களாகவே முடிந்து விடுவார்கள். காங்கிரஸ் பல ஆண்டுகள் பழமையான கட்சி, சுதந்திரத்திற்கு முன்பும், பின்பும் நமது தலைவர்கள் மிக உயர்ந்த தியாகங்களை செய்திருக்கிறார்கள். இவ்வாறு அவர் தெரிவித்தார். கடந்த சில ஆண்டுகளுக்கு முன் காங்கிரஸ் கட்சிக்கு முழுநேர தலைவர் அவசியம் என்றும், கட்சியில் சீர்த்திருத்தங்கள் செய்ய வேண்டும் என்று காங்கிரஸின் இடைக்கால தலைவர் சோனியா காந்திக்கு கடிதம் எழுதிய ஜி23 தலைவர்களில் கபில் சிபலும் ஒருவர் என்பது குறிப்பிடத்தக்கது.