காங்கிரஸின் நல்ல நாட்கள் என்றாவது ஒருநாள் வரும்... அசோக் கெலாட் உறுதி

 
காங்கிரஸ்

காங்கிரஸின் நல்ல நாட்கள் என்றாவது ஒருநாள் வரும் என்று அக்கட்சி தொண்டர்களுக்கு ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலாட் உறுதியளித்தார். 

ராஜஸ்தான் மாநிலத்தில் சஹீட் நினைவிடத்தில் நடைபெற்ற சுதந்திர தின நிகழ்வில் கலந்த கொண்ட அம்மாநில முதல்வர் அசோக் கெலாட் பேசுகையில் கூறியதாவது: நமது மக்களில் சிலர், தலைவர்கள் தொண்டர்களை மதிக்க வேண்டும், கவுரவிக்க வேண்டும் என்று  சொல்லி அவர்களை தூண்டுகிறார்கள். அது ஒரு ஜூம்லா (வெற்று வாக்குறுதி) ஆகிவிட்டது. 

அசோக் கெலாட்

நீங்கள் எப்போதாவது தொண்டர்களை கவுரவித்து மரியாதை செய்திருக்கிறீர்களா? மானம் மற்றும் மரியாதை என்றால் என்ன என்று கூட எங்களுக்கு தெரியுமா?. கவுரவமும் மரியாதையும் பெற்று ஒரு தொண்டராக இருந்து நாம் தலைவராகி விட்டோம். இந்திய தேசிய காங்கிரஸின் மாணவர் பிரிவான இந்திய தேசிய மாணவர் சங்கத்தில் ஒரு கட்சி தொண்டராக அரசியலில் எனது வாழ்க்கையை தொடங்கினேன். 

கட்சியின் முதுகில் குத்திவிட்டார்… சச்சின் பைலட் ஒன்றுக்கும் லாயக்கில்லாதவர்.. அசோக் கெலாட் ஆவேசம்

கட்சி தொண்டர்களின் கவுரவமும், மரியாதையும்  எனக்கு மிக முக்கியம். காங்கிரஸின் நல்ல நாட்கள் என்றாவது ஒருநாள் வரும். இவ்வாறு  அவர் தெரிவித்தார். ராஜஸ்தானின் டோங்க் சட்டப்பேரவை தொகுதி காங்கிரஸ் எம்.எல்.ஏ. பைலட் அடிக்கடி கட்சி தொண்டர்களின் கவுரவம் மற்றும் மரியாதை பிரச்சினைகளை எழுப்பி வருவார் என்பது குறிப்பிடத்தக்கது. அதனால் சச்சின் பைலட்டைதான் அசோக் கெலாட் பெயர் குறிப்பிடாமல் தாக்கியுள்ளார் என கூறப்படுகிறது.