சாதி, மதத்தின் பெயரால் பரவும் வெறுப்பை கட்டுப்படுத்தாவிட்டால் அது உள்நாட்டு போரை நோக்கி செல்லும்.. அசோக் கெலாட்

 
கட்சியின் முதுகில் குத்திவிட்டார்… சச்சின் பைலட் ஒன்றுக்கும் லாயக்கில்லாதவர்.. அசோக் கெலாட் ஆவேசம்

நாட்டில் சாதி, மதத்தின் பெயரால் பரவும் வெறுப்பை கட்டுப்படுத்தாவிட்டால் அது உள்நாட்டு  போரை நோக்கி செல்லும் என்று அசோக் கெலாட் தெரிவித்தார்

ராஜஸ்தான் முதல்வரும், காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவருமான அசோக் கெலாட் நேற்று கன்னியாகுமரியில் பேசுகையில், காங்கிரஸ் தலைவர்களும், தொண்டர்களும் ராகுல் காந்தி கட்சி தலைவராக வர வேண்டும் என்று விரும்புகிறார்கள். இது கட்சியை பலப்படுத்தும். நாட்டில் சாதி, மதத்தின் பெயரால் பரப்படும் வெறுப்பை கட்டுப்படுத்தாவிட்டால் அது உள்நாட்டு  போரை நோக்கி செல்லும் என தெரிவித்தார்.

ராகுல் காந்தி

அண்மையில் காங்கிரஸ் மாநிலங்களவை உறுப்பினர் பிரமோத் திவாரி செய்தியாளர்களிடம் பேசுகையில், காந்தி குடும்பம் காங்கிரஸை வழிநடத்த வேண்டும். நான் காங்கிரஸ்காரர்கள் சார்பாக பேசவில்லை, அது என் விருப்பம். இதை நான் சொல்வதற்கு காரணம் என்னவென்றால், காங்கிரஸ் தலைவர் காந்தி குடும்பத்தை சேர்ந்தவராக இல்லாத போதெல்லாம், கட்சிக்குள் பிளவு ஏற்படுவதுதான் என தெரிவித்தார்.

பிரமோத் திவாரி

காங்கிரஸ் கட்சியின் தலைவர் தேர்தல் வரும் அக்டோபர் 17ம் தேதி தேர்தல் நடைபெற உள்ளது. அக்டோபர் 19ம் தேதி வாக்குகள் எண்ணப்பட்டு, முடிவு அறிவிக்கப்படும்.  காங்கிரஸ் கட்சியின் ஒரு தரப்பினர் ராகுல் காந்தியை எப்படியும் மறுபடியும் தலைவராக்க வேண்டும் என்ற முனைப்பில் உள்ளனர். இருப்பினும் ஒரு தரப்பினர் காந்தி குடும்பத்தை சேராத ஒருவர் தலைவராக வேண்டும் என விருப்பப்படுகின்றனர்.