பா.ஜ.க.-ஆர்.எஸ்.எஸ். இப்போது ஒரு புதிய நாடகத்தை நடத்துகிறது... அசாதுதீன் ஓவைசி குற்றச்சாட்டு..

 
தொழிலாளர்கள் மனிதர்கள் இல்லையா?.. உத்தர பிரதேச அரசை சாடிய அசாதுதீன் ஓவைசி

ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பகவத் மதரஸா சென்றதை குறிப்பிட்டு, பா.ஜ.க.-ஆர்.எஸ்.எஸ். இப்போது ஒரு புதிய நாடகத்தை நடத்துகிறது என்று அசாதுதீன் ஓவைசி குற்றம் சாட்டினார்.

குஜராத் மாநிலத்தில் சட்டப்பேரவைக்கு புதிய உறுப்பினர்களை தேர்ந்தெடுப்பதற்கான சட்டப்பேரவை தேர்தல் இந்த ஆண்டு இறுதியில் நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் ஆம் ஆத்மி, பா.ஜ.க., காங்கிரஸ் உள்பட அனைத்து அரசியல் கட்சிகளும் குஜராத்தில் தங்களது தேர்தல் பிரச்சாரத்தை இப்போதே தொடங்கி விட்டன. பா.ஜ.க.வை கடுமையாக எதிர்த்து வரும் அசாதுதீன் ஓவைசி தலைமையிலான ஏ.ஐ.எம்.ஐ.எம். கட்சியும் குஜராத் தேர்தல் களத்தில் குதித்துள்ளது.

பா.ஜ.க.-ஆர்.எஸ்.எஸ்.

ஏ.ஐ.எம்.ஐ.எம். கட்சி தலைவரும், ஹைதராபாத் எம்.பி.யுமான அசாதுதீன் ஓவைசி குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் ஏ.ஐ.எம்.ஐ.எம். கட்சி சார்பில் நடைபெற்ற கூட்டத்தில் கலந்து கொண்டார். அந்த கூட்டத்தில் அசாதுதீன் ஓவைசி பேசுகையில் கூறியதாவது: பா.ஜ.க.-ஆர்.எஸ்.எஸ். இப்போது ஒரு புதிய நாடகத்தை நடத்துகிறது. ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பகவத் டெல்லியில் உள்ள மதரஸாவிற்கு சென்றார். ஆனால் அசாமில் மதரஸாக்கள் இடிக்கப்படுகின்றன. 

மோகன் பகவத்

உத்தர பிரதேசத்தில் மதரஸா தொடர்பாக கணக்கெடுப்பு நடத்தப்படுகிறது. பா.ஜ.க.விடம்  காட்ட எதுவும் இல்லை. அவர்கள் இந்து-முஸ்லிம்கள் ஒருவருக்கொருவர் சண்டையிடுவதை மட்டுமே காட்டுவார்கள். இவ்வாறு அவர் தெரிவித்தார். ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பகவத் மற்றும் ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் மூத்த நிர்வாகிகள் கடந்த சில தினங்களுக்கு முன் அகில இந்திய இமாம் அமைப்பின் தலைவர் உமர் அகமது இல்யாசியை புதுடெல்லியில் உள்ள மசூதியில் சந்தித்தனர். மேலும் மோகன் பகவத் அங்குள்ள மதரஸாவுக்கு சென்று பார்வையிட்டு, அங்கு இருந்த குழந்தைகளிடம் கலந்துரையாடினார்.