இந்த நாட்டில் ஒரு போதும் முஸ்லிம் வாக்கு வங்கி இருந்ததில்லை, இருக்கப்போவதும் இல்லை... அசாதுதீன் ஓவைசி

 
மகாராஷ்டிராவில் தேசியவாத காங்கிரஸ் முதல்வரா? முதல்ல கல்யாணம் நடக்கட்டும் அப்புறம் குழந்தையை பத்தி பேசலாம்…. அசாதுதீன் ஓவைசி கிண்டல்

இந்த நாட்டில் ஒரு போதும் முஸ்லிம் வாக்கு வங்கி இருந்ததில்லை, இருக்கப்போவதும் இல்லை என அசாதுதீன் ஓவைசி தெரிவித்தார்.

உத்தர பிரதேச மாநிலம் வாரணாசியில் இந்து கோயிலை இடித்து முகலாய மன்னர் அவுரங்கசீப் ஆட்சியின் போது, ஞானவாபி மசூதி கட்டப்பட்டதாக நீண்டகாலமாக சர்ச்சை இருந்து வருகிறது. இந்த சூழ்நிலையில், ஞானவாபி மசூதி வளாகத்தின் வெளிப்புறச் சுவரில் அமைந்துள்ள சிங்கார கவுரி அம்மன் சிலைக்கு தினமும் பூஜை நடத்த வேண்டும் என வாரணாசி நீதிமன்றத்தில் பெண் ஒருவர் வழக்கு தொடர்ந்தார்.  இதனையடுத்து இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம், வழக்கறிஞர்  அஜய் குமார் மிஸ்ரா தலைமையில் ஞானவாபி மசூதியில் கள ஆய்வு மேற்கொள்ள நீதிமன்றம் உத்தரவிட்டது.

உச்ச நீதி மன்றம்

இந்த உத்தரவுக்கு தடைவிதிக்கக்கோரி, முஸ்லிம் அமைப்பு சார்பில் உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. ஆனால் மசூதியில் கள ஆய்வு மேற்கொள்ள வாரணாசி நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவுக்கு இடைக்கால தடை விதிக்க உச்ச நீதிமன்றம் மறுத்து விட்டது. இதனையடுத்து நேற்று  ஞானவாபி மசூதியில் நீதிமன்ற உத்தரவுப்படி கள ஆய்வு பணி  நடந்தது. இந்நிலையில் ஏ.ஐ.எம்.ஐ.எம். கட்சி தலைவரும், ஹைதராபாத் எம்.பி.யுமான அசாதுதீன் ஓவைசி பொதுக்கூட்டம் ஒன்றில் பேசுகையில் கூறியதாவது: முஸ்லிம்களால் அரசாங்கத்தை மாற்ற முடியாது. 

ஞானவாபி மசூதி

இந்த நாட்டில் ஒரு போதும் முஸ்லிம் வாக்கு வங்கி இருந்ததில்லை. இருக்கப்போவதும் இல்லை. அரசாங்கத்தை மாற்ற முடிந்தால், இந்திய நாடாளுமன்றத்தில் ஏன் இவ்வளவு குறைவான முஸ்லிம் பிரதிநிதித்துவம்? பாபர் மசூதிக்கு பதிலாக நாம் ஆட்சியை மாற்றினால்.. இப்போது ஞானவாபி பிரச்சினை தலைதூக்கியுள்ளது. இவ்வாறு அவர் தெரிவித்தார். அண்மையில் அசாதுதீன் ஓவைசி பேட்டி ஒன்றில், 90களில் இருந்ததை போல வெறுப்பின் சகாப்தத்தை மீண்டும் எழுப்ப பா.ஜ.க. மற்றும் ஆர்.எஸ்.எஸ். முயற்சிப்பதாக குற்றம் சாட்டி இருந்தார்.