மாபியாக்கள் சிறைக்கு சென்றனர் என்றால் என் மீது துப்பாக்கி சூடு நடத்தியது யார்?.. அசாதுதீன் ஓவைசி கேள்வி

 
மகாராஷ்டிராவில் தேசியவாத காங்கிரஸ் முதல்வரா? முதல்ல கல்யாணம் நடக்கட்டும் அப்புறம் குழந்தையை பத்தி பேசலாம்…. அசாதுதீன் ஓவைசி கிண்டல்

உத்தர பிரதேச முதல்வர், பிரதமர் மற்றும் மத்திய உள்துறை அமைச்சர் ஆகியோர் கூறியது போல் மாபியாக்கள் சிறைக்கு சென்றனர் என்றால் என் மீது துப்பாக்கி சூடு நடத்தியது யார்? என்று அசாதுதீன் ஓவைசி கேள்வி எழுப்பினார். 

உத்தர பிரதேசம் சம்பலில் நேற்று நடந்த ஏ.ஐ.எம்.ஐ.எம். கட்சியின் தேர்தல் பொதுக்கூட்டத்தில் அந்த கட்சியின் தலைவரும், ஹைதராபாத் எம்.பி.யுமான அசாதுதீன் ஓவைசி கலந்து கொண்டார். அந்த கூட்டத்தில் அசாதுதீன் ஓவைசி கூறியதாவது: என் வாகனம் மீது தோட்டாக்களால் தாக்குதல் நடத்தியவர்கள் கோட்சேவின் வழித்தோன்றல்கள். அவர்களும் காந்தியை கொன்றவர்  போன்ற மனநிலை கொண்டவர்கள். 

ஏ.ஐ.எம்.ஐ.எம்.

அம்பேத்கரின் அரசியலமைப்பு சட்டத்தை அவமரியாதை செய்ய நினைப்பவர்களும் அவர்களே. அவர்கள் சட்டத்தின் ஆட்சியை நம்பவில்லை. ஆனால் துப்பாக்கிகளின் ஆட்சியை நம்புகிறார்கள். அவர்கள் வாக்குகளை நம்ப மாட்டார்கள் ஆனால் தோட்டாக்களை நம்புகிறார்கள். உத்தர பிரதேச முதல்வர், பிரதமர் மற்றும் மத்திய உள்துறை அமைச்சர் ஆகியோர் கூறியது போல் மாபியாக்கள் சிறைக்கு சென்றனர் என்றால்  என் மீது துப்பாக்கி சூடு நடத்தியது யார்?. இவ்வாறு அவர் தெரிவித்தார்.

தோட்டாக்கள் பாய்ந்த ஓவைசி கார்

அசாதுதீன் ஓவைசி கடந்த வாரம் உத்தர பிரதேசம் மீரட்டில் தேர்தல் பிரச்சாரத்தை முடித்து கொண்டு டெல்லிக்கு திரும்பி கொண்டிருந்தார். சாஜர்சி சுங்கசாவடி அருகே அசாதுதீன் ஒவைசி வாகனம் வந்து கொண்டிருந்தபோது மர்ம நபர்கள் அவர் வாகனம் மீது துப்பாக்கியால் சரமாரியாக சுட்டு விட்டு தப்பியோடி விட்டனர். இந்த தாக்குதலில் ஓவைசிக்கு எந்தவித காயமும் ஏற்படவில்லை. இருப்பினும், துப்பாக்கி சூட்டில் அவரது கார் சேதமடைந்தது. இந்த தாக்குதல் தொடர்பாக போலீசார் சிலரை கைது செய்துள்ளனர்.