மதச்சார்பின்மை வல்லுனர்கள் என்று காட்டிக் கொள்பவர்கள் யார் மதச்சார்பற்றவர், யார் வகுப்புவாதி என தீர்மானிக்கிறார்கள்.. ஓவைசி

 
மகாராஷ்டிராவில் தேசியவாத காங்கிரஸ் முதல்வரா? முதல்ல கல்யாணம் நடக்கட்டும் அப்புறம் குழந்தையை பத்தி பேசலாம்…. அசாதுதீன் ஓவைசி கிண்டல்

இன்று மதச்சார்பின்மை வல்லுனர்கள் என்று காட்டிக் கொள்பவர்கள் யார் மதச்சார்பற்றவர், யார் வகுப்புவாதி என்பதை முடிவு தீர்மானிப்பார்கள் இது ஒரு விதத்தில் போலித்தனம் என்று அசாதுதீன் ஓவைசி குற்றம் சாட்டினார்.

குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் ஏ.ஐ.எம்.ஐ.எம். கட்சி தலைவரும், ஹைதராபாத் எம்.பி.யுமான அசாதுதீன் ஓவைசி செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது அசாதுதீன் ஓவைசி கூறியதாவது: சிறுபான்மை சமூகங்களின் வளர்ச்சி, அவர்களுக்கான நீதி என்று பேசும் போது, நமக்கு எதிராக முட்டாள்தனமாக பேசப்படுகிறது. இன்று மதச்சார்பின்மை வல்லுனர்கள் என்று காட்டிக் கொள்பவர்கள் யார் மதச்சார்பற்றவர், யார் வகுப்புவாதி என்பதை முடிவு செய்வார்கள் இது ஒரு விதத்தில் போலித்தனம். நாடு அவர்களை பார்த்துக் கொண்டிருக்கிறது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.

பீகார் முதல்வர் நிதிஷ் குமார் மீது வெங்காயம் வீசி தாக்கிய நபர்கள்… பிரச்சார கூட்டத்தில் பரபரப்பு

முன்னதாக அசாதுதீன் ஓவைசி டிவிட்டரில், புதிய மதச்சார்பற்ற சாச்சா நிதிஷ் குமார் ஆட்சியில் குழந்தைகளுக்கு கூட பாதுகாப்பு இல்லை, அவர்களை கயிற்றால் கட்டி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துகிறார்கள். கலவரக்காரர்களை பிடிக்காமல், முஸ்லிம் குழந்தைகளை குறிவைத்து போலீசார் தாக்குகின்றனர். காவல்துறையினருக்கு கடுமையான தண்டனை வழங்க வேண்டும். குழந்தையின் குடும்பத்தினருக்கு இழப்பீடு வழங்க வேண்டும்.

பா.ஜ.க.

நிதிஷ் குமார் பா.ஜ.க.வுடன் இருந்தபோது முதல்வர் ஆனார். அவர் கோத்ரா படுகொலையின் போது பா.ஜ.க.வுடன் இருந்தார். அவர் 2015ல் அவர்களை (பா.ஜ.க.) விட்டு வெளியேறினார். 2017ல் மீண்டும் சென்றார். நரேந்திர மோடியை வெற்றிபெற செய்ய 2019 தேர்தலில் போட்டியிட்டார். அவர் இப்போது அவர்களை விட்டு விட்டார் என பதிவு செய்து இருந்தார்.