நபிகள் நாயகத்தின் மனைவி தாய்மார்களின் தாய். அவரை தவறாக பேசினால் எப்படி அமைதியாக இருக்க முடியும்?. ஓவைசி

 
மகாராஷ்டிராவில் தேசியவாத காங்கிரஸ் முதல்வரா? முதல்ல கல்யாணம் நடக்கட்டும் அப்புறம் குழந்தையை பத்தி பேசலாம்…. அசாதுதீன் ஓவைசி கிண்டல்

நபிகள் நாயகத்தின் மனைவி எங்கள் தாய்மார்களின் தாய். அவரை பற்றி அப்படி பேசும்போது நாங்கள் எப்படி அமைதியாக இருக்க முடியும்? என அசாதுதீன் ஓவைசி தெரிவித்தார்.

ஹைதராபாத்தில் உள்ள தாருஸ்ஸலாமில் நடைபெற்ற பொதுக்கூட்டம் ஒன்றில் ஏ.ஐ.எம்.ஐ.எம். கட்சி தலைவர் அசாதுதீன் ஓவைசி கலந்து கொண்டார். அந்த கூட்டத்தில் அசாதுதீன் ஓவைசி பேசுகையில் கூறியதாவது: நபிகள் நாயகம் பற்றி நுபுர் சர்மாவின் கருத்துக்கு எதிராக நம் எதிர்ப்பை பதிவு செய்ய நாம் இங்கு கூடியுள்ளோம். நுபுர் சர்மா நபிகள் நாயகம் பற்றி கருத்துக்களை நான் கண்டிக்கிறேன். இந்திய முஸ்லிம்களுக்கு நன்றி. நுபுர் சர்மாவின் கருத்துக்கள் கண்டிக்கத்தக்கது. மேலும் எனக்கு ஏன் இவ்வளவு பிரச்சினை என்று மக்கள் என்னிடம் கேட்கிறார்கள். நான் கூர்மையான பேச்சுக்களை கேட்கிறேன் என்று விமானத்தில் பயணத்தில் பெண் ஒருவர் என்னிடம் கூறினார். இறுதியில், நாம் ஏன் இவ்வளவு கிளர்ச்சியடைந்தோம் என்று என்னிடம் கேட்கப்பட்டது. 

நுபுர் சர்மா

உன் அம்மாவை பற்றி யாராவது எதிர்மறையாக பேசினால் நீங்கள் அமைதியாக இருப்பீர்களா என்று கேட்டேன். நபிகள் நாயகத்தின் மனைவி எங்கள் தாய்மார்களின் தாய். அவரை பற்றி அப்படி பேசும்போது நாங்கள் எப்படி அமைதியாக இருக்க முடியும்?. நாம் அல்லாஹ்விடம் பிரார்த்தனை செய்ய வேண்டும், நாங்கள் அவ்வாறு செய்கிறோம். நபிகள் நாயகம் மக்கா மக்களால் 3 ஆண்டுகள் சமூக புறக்கணிப்பை சந்தித்தார். தீர்க்கதரிசி நம் இதயத்தை போன்றவர். நீங்கள் என் விரல்களை வெட்டினால், நான் அதை எடுத்துக் கொள்வேன். நீங்கள் என்னை காயப்படுத்தினால், நான் அதை எடுத்துக்கொள்வேன். ஆனால் நீங்கள் என் இதயத்துக்கு அருகில் வர விரும்பினால்,நான் அமைதியாக இருக்க மாட்டேன். 

மோடி
முகமது நபி நமது இஸ்லாத்தின் இதயம். பா.ஜ.க. மற்றும் பிரதமர் மோடியிடம் நுபுர் சர்மாவுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கும்படி கோரிக்கை விடுத்து வருகிறேன். ஆனால் அவர் (மோடி) பேசவில்லை. டெல்லிக்கு போலீசாரை அனுப்பி நுபுர் சர்மாவை போலீஸ் கமிஷனர் மற்றும் முதல்வர் சந்திரசேகர் ராவ் அழைத்து வர வேண்டும். அவரை உங்களுடன் அழைத்து வர முடியாதா?. இவ்வாறு அவர் தெரிவித்தார்.