ஆட்சியை பிடிக்கும் பேராசையில், இணக்கமான சமுதாயத்தை உருவாக்க மோடி மறுத்து விட்டார்.. அசாதுதீன் ஓவைசி

 
தொழிலாளர்கள் மனிதர்கள் இல்லையா?.. உத்தர பிரதேச அரசை சாடிய அசாதுதீன் ஓவைசி

ஆட்சியை பிடிக்க வேண்டும் என்ற பேராசையில்,  அனைத்து இந்தியர்களும் பாலினம், மதம், மொழி அல்லது ஜாதி வேறுபாடின்றி இந்தியாவின் சமமான குடிமக்களாக இருக்கும் ஒரு இணக்கமான சமுதாயத்தை உருவாக்கும் பணியில் ஈடுபட நரேந்திர மோடி மறுத்து விட்டார் என அசாதுதீன் ஓவைசி குற்றம் சாட்டினார்.

லடாக்கில் உள்ள ஹாட் ஸ்பிரிங்ஸ் தொடர்பான பிரச்சினை ஏற்கனவே இந்தியாவுடன் பேசி தீர்க்கப்பட்டுவிட்டதாக சீனா கூறியதாக வெளியான செய்தியை குறிப்பிட்டு மத்திய அரசை ஹைதராபாத் எம்.பி. அசாதுதீன் ஓவைசி கடுமையாக விமர்சனம் செய்துள்ளார். இது தொடர்பாக அசாதுதீன் ஓவைசி கூறியதாவது: இது உண்மையா என்பதை அரசு உறுதிப்படுத்துமா? அப்படியானால் கடந்த 2 சுற்று எல்லை பேச்சு வார்த்தைகள் என்னவாக இருந்தன. லடாக்  எல்லை நிலவரம் குறித்து நான் தனிப்பட்ட முறையில் மீண்டும் மீண்டும் கேள்விகளை எழுப்பி வருகிறேன். அங்கு இந்திய வீரர்கள் முன்பு ரோந்து சென்ற பகுதிகளுக்கு அனுமதி மறுக்கப்படுகிறது. ஆனால் நாடாளுமன்றத்தில் கூட இதுவரை உண்மையை கூற மத்திய அரசாங்கம் மறுத்து விட்டது. 

சீனா

நமது பிராந்திய ஒருமைப்பாடு  உள்ளிட்ட தேசிய பாதுகாப்பு தொடர்பான பிரச்சினைகளில் மத்திய அரசின் அணுகுமுறையும், செயல்பாட்டையும் ஏற்றுக்கொள்ள முடியாது. சீனாவை சமாளிப்பதற்கான நமது உத்தி குறித்து நாடாளுமன்றத்தில் முறையான விவாதம் நடத்தப்பட வேண்டும். தேசத்தையம், எம்.பி.க்களையும் அரசாங்கம் ஏன் நம்பவில்லை. மத்திய அரசின் இந்த நடத்தை இந்தியாவின் நலன்களுககு தீங்கு விளைவிக்கும். பா.ஜ.க. அரசாங்கம் நாட்டை பல்வேறு வழிகளில் பிளவுப்படுத்துவதற்கும், வெளி எதிரிகளை கையாள்வதில் தேசத்தின் வலிமையை பலவீனப்படுத்துவதற்கும் எல்லாவற்றையும்  செய்து வருகிறது. 

பிரதமர் மோடி

ஆட்சியை பிடிக்க வேண்டும் என்ற பேராசையில்,  அனைத்து இந்தியர்களும் பாலினம், மதம், மொழி அல்லது ஜாதி வேறுபாடின்றி இந்தியாவின் சமமான குடிமக்களாக இருக்கும் ஒரு இணக்கமான சமுதாயத்தை உருவாக்கம் பணியில் ஈடுபட நரேந்திர மோடி மறுத்து விட்டார். லடாக்கில் பிரச்சினை உள்ளது. நாம் தவறுதலாக பாகிஸ்தான் மீது ஏவுகணையை வீசுகிறோம். பொதுமக்களுக்கு தகவல் தெரிவிக்கப்படுவதில்லை. சமூகத்தை துருவப்படுத்துவதில் அரசாங்கம் அதிக அக்கறை கொண்டுள்ளது. இது பேரழிவுக்கான செய்முறை. இவ்வாறு அவர் தெரிவித்தார்.