முஸ்லிம்கள் தங்களுக்கென்று ஒரு அரசியல் அடையாளத்தை உருவாக்க வேண்டும்.. அசாதுதீன் ஓவைசி

 
அரசியலமைப்பில் மனிதர்களுக்குதான் உரிமை வழங்கப்பட்டுள்ளது பசுகளுக்கு அல்ல- பிரதமர் மோடிக்கு ஓவைசி பதிலடி

சமாஜ்வாடி கட்சியால் பா.ஜ.க.வை தோற்கடிக்க முடியாது என்பதை இடைத்தேர்தல் முடிவுகள் தெரிவிக்கின்றன,  நாட்டின் முஸ்லிம்கள் தங்களுக்கென்று  ஒரு அரசியல் அடையாளத்தை உருவாக்கிக் கொள்ள வேண்டும் என அசாதுதீன் ஓவைசி தெரிவித்தார்.

உத்தர பிரதேசத்தில் இடைத்தேர்தல் நடைபெற்ற சமாஜ்வாடியின் கோட்டையாக கருதப்படும் ராம்பூர் மற்றும் அசாம்கார் ஆகிய 2 மக்களவை தொகுதிகளிலும் பா.ஜ.க. வேட்பாளர்கள் வெற்றி பெற்றனர். இது சமாஜ்வாடி கட்சியின் தலைவர் அகிலேஷ் யாதவுக்கு பெரும் பின்னடைவாக கருதப்படுகிறது. இந்நிலையில், உத்தர பிரதேச இடைத்தேர்தல் முடிவுகள் சமாஜ்வாடி கட்சியால் பா.ஜ.க.வை தோற்கடிக்க இயலாது, அவர்களுக்கு அறிவுசார் நேர்மை இல்லை என்று காட்டுகின்றன என அசாதுதீன் ஓவைசி குற்றம் சாட்டியுள்ளார்.

ஹத்ராஸ் சென்ற ஆம் ஆத்மி எம்.பி. சஞ்சய் சிங் மீது மை வீச்சு.. சமாஜ்வாடி கட்சி கண்டனம்

உத்தர பிரதேச இடைத்தேர்தல் முடிவுகள் தொடர்பாக ஏ.ஐ.எம்.ஐ.எம். கட்சி தலைவரும், ஹைதராபாத் எம்.பி.யுமான அசாதுதீன் ஓவைசி கூறியதாவது: உத்தர பிரதேச இடைத்தேர்தல் முடிவுகள் சமாஜ்வாடி கட்சியால் பா.ஜ.க.வை தோற்கடிக்க இயலாது, அவர்களுக்கு அறிவுசார் நேர்மை இல்லை என்று காட்டுகின்றன. சிறுபான்மை சமூகம் இதுபோன்ற திறமையற்ற கட்சிகளுக்கு வாக்களிக்க கூடாது. 

முஸ்லிம்கள்

பா.ஜ.க.வின் வெற்றிக்கு யார் காரணம், இப்போது அவர்கள் பி-டீம், சி-டீம் என்று யாரை பெயரிடுவார்கள். ராம்பூர், அசம்கர் மக்களை தொகுதி இடைத்தேர்தலில் சமாஜ்வாடி கட்சியின் தோல்விக்கு அந்த கட்சியின் தலைவர் அகிலேஷ் யாதவ் தான் காரணம். அகிலேஷ் யாதவ் ம்ககளை சந்திக்கக் கூட வராத அளவுக்கு திமிர் கொண்டவர். நாட்டின் முஸ்லிம்கள் தங்களுக்கென்று ஒரு அரசியல் அடையாளத்தை உருவாக்கிக் கொள்ளுமாறு நான் வேண்டுகோள் விடுக்கிறேன். இவ்வாறு அவர் தெரிவித்தார்.