முஸ்லிம்களையும், முகமது நபியையும் பா.ஜ.க. வெறுக்கிறது, இது பா.ஜ.க.வின் அதிகாரப்பூர்வ கொள்கை.. அசாதுதீன் ஓவைசி

 
தொழிலாளர்கள் மனிதர்கள் இல்லையா?.. உத்தர பிரதேச அரசை சாடிய அசாதுதீன் ஓவைசி

முஸ்லிம்களையும், முகமது நபியையும் பா.ஜ.க. வெறுக்கிறது. இது பா.ஜ.க.வின் அதிகாரப்பூர்வ கொள்கையாக தெரிகிறது என்று அசாதுதீன் ஓவைசி குற்றம் சாட்டினார்.

தெலங்கானாவில் கோஷாமஹால் சட்டப்பேரவை தொகுதி பா.ஜ.க. எம்.எல்.ஏ. டி.ராஜா சில தினங்களுக்கு முன் ஸ்டாண்ட் அப் காமெடியனர் முனாவர் பரூக்கியை விமர்சித்து ஒரு வீடியோ ஒன்றை வெளியிட்டார். அந்த வீடியோவில் மதத்துக்கு எதிராகவும் சில கருத்துக்களை தெரிவித்துள்ளார். இதனையடுத்து கடந்த திங்கட்கிழமை இரவு போராட்டம் வெடித்ததையடுத்து பா.ஜ.க.  எம்.எல்.ஏ. டி.ராஜா மீது போலீசார் வழக்கு பதிவு செய்தனர். நேற்று அவரை போலீசார் கைது செய்தனர். 

பா.ஜ.க. எம்.எல்.ஏ. ராஜா சிங்

இந்நிலையில், முகமது நபி குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசியதற்காக தனது கட்சி எம்.எல்.ஏ. டி.ராஜாவை சஸ்பெண்ட் செய்தள்ளது. மேலும், உங்களை ஏன் கட்சியில் இருந்து நீக்கக்கூடாது என்பதற்கான காரணத்தையும் இந்த அறிவிப்பு வெளியான 10 நாட்களுக்குள் தெரிவிக்க வேண்டும் என்று ராஜாவுக்கு பா.ஜ.க. நோட்டீஸ் அனுப்பியுள்ளது. சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ள பா.ஜ.க.  எம்.எல்.ஏ. டி.ராஜாவின் பேச்சை குறிப்பிட்டு பா.ஜ.க.வை அசாதுதீன் ஓவைசி கடுமையாக தாக்கியுள்ளார். அசாதுதீன் ஓவைசி கூறியதாவது:  முஸ்லிம்களையும், முகமது நபியையும் பா.ஜ.க. வெறுக்கிறது. இது பா.ஜ.க.வின் அதிகாரப்பூர்வ கொள்கையாகவே தெரிகிறது. 

பா.ஜ.க.

பா.ஜ.க. எம்.எல்.ஏ. கொச்சைப்படுத்திய அழுக்கை கண்டிக்கிறேன். குரல் பதிவு எப்.எஸ்.எல்.-க்கு அனுப்பப்பட்டு விசாரணை நடத்தப்பட வேண்டும். அவர்களால் (பா.ஜ.க.) ஹைதராபாத்தில் அமைதியை காண முடியாது. தேசத்தின் சமூக கட்டமைப்பை உடைக்க பா.ஜ.க. விரும்புகிறதா?. முஸ்லிம்களை உணர்ச்சி ரீதியாகவும், உடலியல் ரீதியாகவும் காயப்படுத்துவது பா.ஜ.க.வின் அதிகாரப்பூர்வ கொள்கை. நுபுர் சர்மா சிறையில் இருக்கிறாரா? இப்போதும் அவருக்கு போலீஸ் பாதுகாப்பு கொடுத்துள்ளீர்கள். பா.ஜ.க. எம்.எல்.ஏ.வின் அறிக்கையை பிரதமர் ஏற்றுக்கொள்கிறாரா?. இந்த விவகாரத்தில் மாநில அரசு கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.