அதிமுகவினர் குழப்பமான மன நிலையில் இருப்பதால்... அமைச்சர் ராஜ கண்ணப்பன்

 
r

அதிமுக பொறுத்தவரைக்கும் அவர்களுக்குள் ஒற்றுமை இல்லை.  குழப்பமான மனநிலையில் அவர்கள் இருப்பதால் திமுக வேட்பாளருக்குத் தான் வெற்றி வாய்ப்பு என்கிறார் அமைச்சர் ராஜகண்ணப்பன்.

 திருநெல்வேலியில் அமைச்சர் ராஜகண்ணப்பன் செய்தியாளர்களை சந்தித்து பேசினார் .  அப்போது ஈரோடு கிழக்குத் தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிடுகின்ற வேட்பாளர் நம் கட்சியின் கூட்டணி வேட்பாளர் ஈவி. கே .எஸ் இளங்கோவனை முதல்வர் அறிவித்துள்ளார்.   முதல்வரின் வழிகாட்டுதலின் பேரில் இந்த இடைத்தேர்தலில் கூட்டணி கட்சி களமிறங்கி நிச்சயம் வெற்றி பெறும் என்றார் .

ra

அவர் மேலும் பேசிய போது,  அதிமுகவை பொறுத்தவரை அவர்களுக்குள்ளே ஒற்றுமை இல்லை.   அதனால் அவர்கள் குழப்பமான மனநிலையில் இருக்கிறார்கள். இதனால் நாளை யாரை வேட்பாளராக அறிவித்தாலும் திமுகவின் கூட்டணி வேட்பாளர் மிகப்பெரிய வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறுவார் என்றார்.

 ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் அதிமுக சார்பில் எடப்பாடி பழனிச்சாமி அணியும்,  ஓ. பன்னீர்செல்வம் அணியும் களமிறங்க முடிவெடுத்து இருக்கின்றன. இதற்கிடையில் கூட்டணியில் இருக்கும் பாஜகவும் களம் இறங்க முடிவெடுத்து இருக்கின்றன.   யார் போட்டியிடுவது என்று இன்னும் அவர்களுக்குள் ஒரு முடிவுக்கு வராமல் இருக்கிறார்கள் .  இந்த நிலையில் தான் அமைச்சர் ராஜகண்ணப்பன் இப்படி ஒரு கருத்தை தெரிவித்து இருக்கிறார்.