எங்களுக்கு அரசியல் தெரியாது. நாங்கள் இங்கு அரசியல் செய்ய வரவில்லை... இமாச்சல பிரதேசத்தில் கெஜ்ரிவால்

 
அரவிந்த் கெஜ்ரிவால்

எங்களுக்கு அரசியல் தெரியாது. நாங்கள் இங்கு அரசியல் செய்ய வரவில்லை என இமாச்சல பிரதேச மக்களிடம் அரவிந்த் கெஜ்ரிவால் தெரிவித்தார்.

இமாச்சல பிரதேசத்தில் 68 உறுப்பினர்களை கொண்ட அம்மாநில சட்டப்பேரவைக்கு புதிய உறுப்பினர்களை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் இந்த ஆண்டு இறுதியில் நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. எதிர்வரும் இமாச்சல பிரதேச தேர்தலில் ஆம் ஆத்மி கட்சி வெற்றி பெற்று ஆட்சி ஆட்சியை பிடிக்கும் முனைப்பில் அதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக இமாச்சல பிரதேசம் குலுவில் நேற்று ஆம் ஆத்மி கட்சி சார்பில் பேரணி நடைபெற்றது.

ஆம் ஆத்மி

குலுவில் நடைபெற்ற பேரணயில், ஆத் ஆத்மி கட்சியின் தலைவர் அரவிந்த் கெஜ்ரிவால், பஞ்சாப் முதல்வர் பகவந்த் மான் கலந்து கொண்டனர். அந்த பேரணியில் அரவிந்த் கெஜ்ரிவால் பேசுகையில் கூறியதாவது: எங்களுக்கு அரசியல் தெரியாது. நாங்கள் இங்கு அரசியல் செய்ய வரவில்லை. அண்ணா இயக்கத்தில் தொடங்கிய எங்கள் பயணம், பின்னர் கட்சியை உருவாக்கினோம். ஊழலை நாட்டிலிருந்து ஒழிப்போம் என்று சபதம் எடுத்தோம். முதலில் நாங்கள் டெல்லியில் ஊழலை முடிவுக்கு கொண்டு வந்தோம். பின்னர் அதை பஞ்சாபில் தொடங்கினோம். 

பகவந்த் மான்

ஒரு முதல்வர் தனது அமைச்சரை சிறைக்கு அனுப்பியதை பற்றி நீங்கள் எப்போதாவது கேள்விபட்டிருக்கிறீர்களா? பகவந்த் மான் சஹாப் தனது அமைச்சர் நேர்மையற்ற செயல்களில் ஈடுபட்டிருப்பதை கண்டுபிடித்தார். எதிர்க்கட்சிகளுக்கும், ஊடகங்களுக்கும் தெரியாது. அவர் (பகவந்த் மான்) விரும்பினால் அதை வெளியே தெரியாமல் அழித்திருக்கலாம் அல்லது அமைச்சரிடம் பங்கு கேட்டு இருக்கலாம். ஆனால் அவரை (அமைச்சரை) சிறைக்கு அனுப்பினார். இவ்வாறு அவர் தெரிவித்தார்.