பஞ்சாபில் வீட்டுக்கே ரேஷன் விநியோகம்.. டெல்லியில் அதை மத்திய பா.ஜ.க. அரசு தடுத்தது.. அரவிந்த் கெஜ்ரிவால்

 
தேவையில்லாமல் வாய் விட்டு சிங்கப்பூரிடம் வாங்கி கட்டிக்கொண்ட அரவிந்த் கெஜ்ரிவால்!

டெல்லியில் வீடுகளுக்கு நேரடியாக ரேஷன் விநியோகம் செய்யும் திட்டத்தை செயல்படுத்த திட்டமிட்டோம் ஆனால் மத்திய பா.ஜ.க. அரசு அதை தடுத்தது என்று முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் குற்றம் சாட்டினார்.

பஞ்சாபில் ஆட்சிக்கு வந்த சிறிது நாட்களிலேயே, முதல்வர் பகவந்த் மான் தலைமையிலான ஆம் ஆத்மி அரசு அந்த மாநிலத்தில் வீட்டுக்கே சென்று ரேஷன் வழங்கும் திட்டத்தை அறிமுகப்படுத்துவதாக அறிவித்தது. பஞ்சாப் அரசு இந்த திட்டத்தை அறிவித்த சிறிது நேரத்திலேயே, ஆம் ஆத்மியின் தலைவரும், டெல்லி முதல்வருமான அரவிந்த் கெஜ்ரிவால், டெல்லியில் இந்த திட்டத்தை பா.ஜ.க. தலைமையிலான மத்திய அரசு தடுப்பதற்கு கடும் கண்டனம் தெரிவித்தார்.

பகவந்த் மான்

இது தொடர்பாக அரவிந்த் கெஜ்ரிவால் கூறியதாவது: இன்று பஞ்சாப் முதல்வர் பகவந்த் மான் வீட்டு வாசலில் ரேஷன் விநியோகம் செய்வதாக அறிவித்தார். அது விரைவில் செயல்படுத்தப்படும். கடந்த 4 ஆண்டுகளாக டெல்லியில் அதை செயல்படுத்த போராடி வருகிறோம். நாங்கள் எல்லாவற்றையும் திட்டமிட்டோம். ஆனால் மத்திய பா.ஜ.க. அரசு அதை தடுத்து நிறுத்தியது.

மத்திய அரசு

ஒரு பழமொழி உள்ளது, ஒருவடைய நேரம் வந்து விட்டது என்றால் எண்ணத்தை உங்களால் நிறுத்த முடியாது. அவர்கள் (மத்திய அரசு) எங்களை டெல்லியில் செயல்படுத்த அனுமதிக்கவில்லை, எந்த பிரச்சினையும் இல்லை. நாங்கள் அதை பஞ்சாபில் செய்வோம். நாட்டின் பிற பகுதிகள் அதைக் கோரும். இது மொஹல்லா கிளினிக்குகள் போன்று நாட்டில் நடைமுறைப்படுத்தப்படும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.