எம்.எல்.ஏ.க்களை விலைக்கு வாங்க பா.ஜ.க. பழகி விட்டது, காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்களை விற்று பிழைப்பு நடத்துகிறது.. கெஜ்ரிவால்

 
அரவிந்த் கெஜ்ரிவால்

எம்.எல்.ஏ.க்களை விலைக்கு வாங்க பா.ஜ.க. பழகி விட்டது, காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்களை விற்று பிழைப்பு நடத்துகிறது என்று அரவிந்த் கெஜ்ரிவால் குற்றம் சாட்டினார்.

குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் ஆம் ஆத்மி கட்சி சார்பில் பொதுக்கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் ஆம் ஆத்மி கட்சியின் தேசிய ஒருங்கிணைப்பாளரும், டெல்லி முதல்வருமான அரவிந்த் கெஜ்ரிவால் மற்றும் பஞ்சாப் முதல்வர் பகவந்த் மான் கலந்து கொண்டனர். அந்த கூட்டத்தில் அரவிந்த் கெஜ்ரிவால் பேசுகையில் கூறியதாவது: எம்.எல்.ஏ.க்களை விலைக்கு வாங்க பா.ஜ.க. பழகி விட்டது. காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் விற்பனையில் ஈடுபட்டுள்ளனர். அதேபோல் காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்களை விற்று பிழைப்பு நடத்துகிறது.

ஆம் ஆத்மி

காங்கிரஸை நம்பாதீர்கள். மாற்றத்தை பாருங்கள். குஜராத்தில் மாபெரும் பெரும்பான்மையுடன் ஆம் ஆத்மி அரசு அமைக்கப்பட உள்ளதாக அரசு அறிக்கை ஒன்று வந்துள்ளது. எப்படியாவது ஆம் ஆத்மியை நிறுத்த வேண்டும், இல்லையெனில் கொள்ளை அடிப்பது நின்று விடும் என்று பா.ஜ.க.-காங்கிரஸ் ரகசிய சந்திப்பு நடத்துகிறது.  ஆம் ஆத்மி அரசு அமைந்தால், இந்த மக்கள் பள்ளிகளை- மருத்துவமனைகளை உருவாக்குவார்கள். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

பா.ஜ.க.

குஜராத்தில் இந்த ஆண்டு இறுதியில் அம்மாநில சட்டப்பேரவைக்கு புதிய உறுப்பினர்களை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் இந்த ஆண்டு இறுதியில் நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் அரசியல் கட்சிகள் அனைத்து அந்த மாநிலத்தில் இப்போது  தீவிர பிரச்சாரத்தை மேற்கொண்டு வருகின்றன. ஆம் ஆத்மிக்கு ஆதரவாக டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் அடிக்கடி குஜராத் சென்று பிரச்சாரம் செய்து வருகிறார். தற்போது அரவிந்த் கெஜ்ரிவாலும், பகவந்த் மானும் இரண்டு நாள் பயணமாக நேற்று குஜராத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளனர்.