குஜராத்தில் வரவிருக்கும் தேர்தல்கள் ஒரு வெகுஜன இயக்கமாக மாறி விட்டது.... அரவிந்த் கெஜ்ரிவால்

 
அரவிந்த் கெஜ்ரிவால்

குஜராத்தில் வரவிருக்கும் தேர்தல்கள் ஒரு வெகுஜன இயக்கமாக மாறி விட்டது என்று அரவிந்த் கெஜ்ரிவால் தெரிவித்தார்.

குஜராத் மாநிலத்தில் இந்த ஆண்டு இறுதியில் சட்டப்பேரவை தேர்தல் நடைபெற உள்ளது. இந்த தேர்தலில் எப்படியேனும் தடம் பதிக்க வேண்டும் என்று ஆம் ஆத்மி தீவிரமாக உள்ளது. இதற்காக ஆம் ஆத்மி கட்சியின் தேசிய ஒருங்கிணைப்பாளர் அரவிந்த் கெஜ்ரிவால் குஜராத்துக்கு அடிக்கடி வந்து ஆம் ஆத்மிக்காக மக்கள் மத்தியில் பிரச்சாரம் செய்து வருகிறார். தற்போது ஆளும் கட்சியான பா.ஜ.க.வும் தேர்தலை கருத்தில் கொண்டு காய்களை நகர்த்த தொடங்கி விட்டது.

மோடி

பிரதமர் நரேந்திர மோடி 2 நாள் பயணமாக குஜராத் சென்றார். குஜராத்தின் புஜ் மாவட்டத்தில் பிரதமர் மோடி பேரணியில் பங்கேற்று பல்வேறு வளர்ச்சி பணிகளை தொடங்கி வைத்தார். இந்நிலையில் எதிர்வரும் குஜராத் தேர்தல் வெகுஜன இயக்கமாக மாறி விட்டது என்று அரவிந்த் கெஜ்ரிவால் தெரிவித்தார். ஆம் ஆத்மி எம்.எல்.ஏ. குலாம் சிங் யாதவ் டிவிட்டரில், இன்று குஜராத்தில் பிரதமர் கூட்டத்துக்கு 2,400 அரசு பேருந்துகள் வந்துள்ளன. 

பா.ஜ.க.

கூட்டம் முடிந்து திரும்பும் போது அனைத்து நடத்துனர்களும் பயணிகளிடம் இந்த அரசு (பா.ஜ.க. அரசு) பேச்சு மட்டுமே பேசுகிறது, கெஜ்ரிவாலுக்கு வாய்ப்பு தர வேண்டும் என அனைத்து நடத்துனர்கள், ஓட்டுனர்கள் குழுக்களில் மெசேஜ் செல்கிறது என பதிவு செய்து இருந்தார். குலாம் சிங் யாதவின் கருத்துக்கு அரவிந்த் கெஜ்ரிவால் பதில் அளித்து இருந்தார். அரவிந்த் கெஜ்ரிவால் டிவிட்டரில், அதனால்தான் இவர்கள் மிகவும் பதட்டமாக இருக்கிறார்கள்.டெல்லியில் இவ்வளவு பொய் வழக்குகள் நடக்க இதுதான் காரணம். குஜராத்தில் வரவிருக்கும் தேர்தல்கள் ஒரு வெகுஜன இயக்கமாக மாறி விட்டது என பதிவு செய்துள்ளார்.