ஆத் ஆத்மியின் பல எம்.எல்.ஏ.க்கள் கைது செய்யப்படுவார்கள்.. அரவிந்த் கெஜ்ரிவால் தகவல்

 
அரவிந்த் கெஜ்ரிவால்

ஆம் ஆத்மி எம்.எல்.ஏ. அமனதுல்லா கான் கைது குறித்து பேசுகையில், தங்களது கட்சியின் பல எம்.எல்.ஏ.க்கள் கைது செய்யப்படுவார்கள் என்று ஆம் ஆத்மி கட்சியின் தேசிய ஒருங்கிணைப்பாளர் அரவிந்த் கெஜ்ரிவால் தெரிவித்தார்.

டெல்லி வக்ப் வாரியத்தில் சட்டவிரோதமாக பணி நியமனம் செய்ததாக கூறப்படும் வழக்கில் தொடர்பாக ஓக்லா சட்டப்பேரவை தொகுதியின் ஆம் ஆத்மி எம்.எல்.ஏ. அமனதுல்லா கானை கடந்த வெள்ளிக்கிழமையன்று டெல்லி ஊழல் தடுப்பு பிரிவினர் விசாரணைக்கு அழைத்தனர். அவரிடம் விசாரணை முடிந்தவுடன் அவரை ஊழல் தடுப்பு பிரிவினர் கைது செய்தனர். இது குறித்து ஆம் ஆத்மி கட்சியின் தேசிய ஒருங்கிணைப்பாளரும், டெல்லி முதல்வருமான கூறுகையில், குஜராத்தில் அவர்கள் (பா.ஜ.க.) மிகவும் கஷ்டப்படுகிறார்கள் போல் தெரிகிறது என கிண்டலாக தெரிவித்தார்.

அமனதுல்லா கான்

மேலும், டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் டிவிட்டரில், முதலில் சத்யேந்திர ஜெயினை கைது செய்தனர். நீதிமன்றத்தில் பலமுறை கேட்டும் அவர்களால் எந்த ஆதாரத்தையும் சமர்ப்பிக்க முடியவில்லை. பின்னர் மணிஷ் சிசோடியா வீட்டில் சோதனை நடத்தியும் எதுவும் கிடைக்கவில்லை. தற்போது அமனதுல்லா கைது செய்யப்பட்டுள்ளார். மேலும் பல எம்.எல்.ஏ.க்கள் கைது செய்யப்படுவார்கள் என பதிவு செய்து இருந்தார்.

பா.ஜ.க.

அதேவேளையில், அமனதுல்லா கானின் நெருங்கிய உதவியாளரும், வர்த்தக கூட்டாளியுமான ஹமீத் அலி ஆயுத சட்டத்தின் கீழ் டெல்லி காவல்துறையால் கைது செய்யப்பட்டார். அவரது வீட்டில் இருந்து துப்பாக்கி, தோட்டாக்கள் மற்றும் ரூ.12 லட்சம் ரொக்கம் ஆகியவற்றை போலீசார் கைப்பற்றினர். இது ஆம் ஆத்மி கட்சிக்கு பெரும் நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது.