குஜராத்தில் பா.ஜ.க.வுக்கு வாக்களித்தால் அமித் ஷாவின் மகனுக்கு முன்னேற்றம் ஏற்படும்... அரவிந்த் கெஜ்ரிவால் தாக்கு

 
ஜெய் ஷா, அமித் ஷா

குஜராத்தில் பா.ஜ.க.வுக்கு வாக்களித்தால் அமித் ஷாவின் மகனுக்கு மட்டுமே முன்னேற்றம் ஏற்படும் என்று ஆம் ஆத்மி கட்சியின் தேசிய ஒருங்கிணைப்பாளர் அரவிந்த் கெஜ்ரிவால் தெரித்தார்.

குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் ஆம் ஆத்மி சார்பில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் டெல்லி முதல்வரும், ஆம் ஆத்மி கட்சியின் தேசிய ஒருங்கிணைப்பாளருமான அரவிந்த் கெஜ்ரிவால் மற்றும் பஞ்சாப் முதல்வர் பகவந்த் மான் கலந்து கொண்டனர். அந்த கூட்டத்தில் அரவிந்த் கெஜ்ரிவால் பேசுகையில் கூறியதாவது: 27 ஆண்டுகளுக்கு பிறகு புதிதாக ஒன்று நடக்கும். சோனியா காந்திக்கு வாக்களித்தால் ராகுல் காந்தியின் முன்னேற்றம் ஏற்படும். பா.ஜ.க.வுக்கு வாக்களித்தால் அமித் ஷாவின் மகனுக்கு மட்டுமே முன்னேற்றம் ஏற்படும். இந்த மக்களால் வளர்ச்சியை பார்க்க முடியாது. என்னை தீவிரவாதியுடன் ஒப்பிடுகின்றனர். 

அரவிந்த் கெஜ்ரிவால்

எங்கள் நிகழ்ச்சி இடங்கள் கடைசி நேரத்தில் ரத்து செய்யப்படுகின்றன. இந்த போக்கிரிக்கு குஜராத் மக்கள் பதில் சொல்வார்கள். எங்களது 12 நிகழ்ச்சி இடங்கள் ரத்து செய்யப்பட்டன. இவ்வாறு அவர் தெரிவித்தார். பஞ்சாப் முதல்வர் பகவந்த் மான் பேசுகையில் கூறியதாவது: நாங்கள் விரிவுரைகளை வழங்க வரவில்லை உங்களுடன் கலந்துரையாடுவதற்காக இங்கு வந்துள்ளோம். நாங்கள் பேசுவது மட்டும் இல்லை, அதேசமயம் பா.ஜ.க. பேசுவதும் கேட்கிறது. மக்களின் மனதின் குரலை கேளுங்கள்.  இப்போது சிஸ்டத்தை மாற்றும் சக்தி உங்களிடம் உள்ளது. எங்கள் கட்சி ராம்லீலா மைதானத்தில் இருந்து தொடங்கியது. ஊழலுக்கு எதிரான தருணத்தில் இருந்து தொடங்கியது. பொறியாளர்கள், மருத்துவர்கள் அனைவரும் எங்கள் கட்சியில் உள்ளனர். 

பகவந்த் மான்

பஞ்சாபில் எங்களுக்கு 92 எம்.எல்.ஏ.க்கள் உள்ளனர். இவர்களில் 82 பேர் முதல் முறையாக வந்தவர்கள். அனைவரும் இளைஞர்கள். இளைஞர்களை நாடாளுமன்றத்துக்கு அழைத்து செல்வது ஆம் ஆத்மி கட்சிதான். எங்கள் பஞ்சாபில் இளைஞர்கள் எங்களுடன் இருக்கிறார்கள். எங்களிடம் பணம் இல்லை ஆனால் அவர்களிடம் (பா.ஜ.க.) நிறைய பணம் இருக்கிறது. எம்.எல்.ஏ.க்களை விலைக்கு வாங்குகிறார்கள். அவர்கள் டெல்லியில் முயற்சித்தார்கள், அவர்களுடன் ஒருவர் கூட செல்லவில்லை. பஞ்சாபிலும் அதே முயற்சியை மேற்கொண்டனர். இவ்வாறு  அவர் தெரிவித்தார்.