எனக்கு ஒரு வாய்ப்பு கொடுங்கள். ஹரியானாவின் அனைத்து பள்ளிகளையும் மேம்படுத்துவேன்.. அரவிந்த் கெஜ்ரிவால்

 
அரவிந்த் கெஜ்ரிவால்

ஹரியானாவில் எதிர்வரும் உள்ளாட்சி தேர்தலில் எனக்கு (ஆம் ஆத்மி) ஒரு வாய்ப்பு கொடுங்கள், மாநிலத்தின் அனைத்து பள்ளிகளையும் மேம்படுத்துவேன் என அம்மாநில  மக்களிடம் அரவிந்த் கெஜ்ரிவால் வாக்குறுதி அளித்தார்.

ஹரியானாவில் அடுத்த மாதம் உள்ளாட்சி தேர்தல் நடைபெற உள்ளது. இந்த தேர்தலில் ஆம் ஆத்மி போட்டியிடுகிறது. இந்நிலையில் ஹரியானாவின் குருஷேத்ராவில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் ஆம் ஆத்மி கட்சியின் தேசிய ஒருங்கிணைப்பாளரும், டெல்லி முதல்வருமான அரவிந்த் கெஜ்ரிவால் கலந்து கொண்டார். அந்த கூட்டத்தில் அரவிந்த் கெஜ்ரிவால் பேசுகையில் கூறியதாவது: எனக்கு ஒரு வாய்ப்பு கொடுங்கள். ஹரியானாவின் அனைத்து பள்ளிகளையும் மேம்படுத்துவேன்.

டெல்லி அரசு பள்ளி

டெல்லி அரசு பள்ளிகளே அதற்கு சாட்சி. ஏழைகளின் குழந்தைகளும் பொறியாளர்களாகவும், டாக்டர்களாகவும் மாறுவார்கள். கடந்த 7 ஆண்டுகளில் டெல்லியின் தனியார் பள்ளிகள் தங்கள் கட்டணத்தை அதிகரிக்க நாங்கள் அனுமதிக்கவில்லை. பஞ்சாபில் ஆம் ஆத்மி அமைச்சர் ஊழல் செய்தார். யாருக்கும் தெரியாது, ஊடகங்களுக்கு தெரியாது. வேறு எந்த கட்சியாக இருந்தால் அவரிடம் கமிஷன் கேட்டு இருக்கும். ஆனால் நாங்கள் அவரை டிஸ்மிஸ் செய்து சிறைக்கு அனுப்பினோம்.

ஆம் ஆத்மி

வேறு எந்த கட்சியும் இது போன்று செய்தது இல்லை, ஏனென்றால் அவர்கள் ஊழல்வாதிகள் என்பதால் அவர்களுக்கு இது ஒன்றும் இல்லை. இவ்வாறு அவர் தெரிவித்தார். ஹரியானாவில் ஜூன் 19ம் தேதியன்று 46 நகராட்சி அமைப்புகள், 28 நகராட்சி குழுக்கள் மற்றும் 18 நகராட்சி மன்றங்களுக்கு தேர்தல் நடைபெற உள்ளது. தேர்தல் முடிவுகள் ஜூன் 22ம்  தேதி  அறிவிக்கப்படும்.