குஜராத் சட்டப்பேரவை தேர்தலுக்கான ஆம் ஆத்மி கட்சியின் முதல் வேட்பாளர் யார்?.. அரவிந்த் கெஜ்ரிவால் இன்று அறிவிப்பு

 
டெல்லியில் பேருந்துகளில் பெண்களுக்கு  இலவச பயணம்….. அரவிந்த் கெஜ்ரிவால் அதிரடி

குஜராத் சட்டப்பேரவை தேர்தலுக்கான ஆம் ஆத்மி கட்சியின் முதல்வர் வேட்பாளர் யார் என்பதை அந்த கட்சியின் தேசிய ஒருங்கிணைப்பாளர் அரவிந்த் கெஜ்ரிவால் இன்று (நவம்பர் 4ம் தேதி)  அறிவிக்க உள்ளார்.

குஜராத்தில் அம்மாநில சட்டப்பேரவைக்கு புதிய உறுப்பினர்களை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் டிசம்பர் 1 மற்றும் 5 என இரண்டு கட்டங்களாக நடைபெறும் இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. தேர்தல் தேதி அறிவிப்பதற்கு முன்னதாகவே பா.ஜ.க., காங்கிரஸ் மற்றும் ஆம் ஆத்மி உள்பட அனைத்து கட்சிகளும் அங்கு தேர்தல் பிரச்சாரத்தை தீவிரமாக மேற்கொண்டு வருகின்றன. குறிப்பாக ஆம் ஆத்மி கட்சி மற்ற கட்சிகளை காட்டிலும் தேர்தல் பிரச்சாரத்தை முன்கூட்டியே தொடங்கியது.

தேர்தல் ஆணையம்

ஆம் ஆத்மி கட்சியின்  தேசிய ஒருங்கிணைப்பாளரும், டெல்லி முதல்வருமான அரவிந்த் கெஜ்ரிவால் மற்றும் பஞ்சாப் முதல்வரும், ஆம் ஆத்மி கட்சியின் பிரபல தலைவர்களில் ஒருவருமான பகவந்த் மான் ஆகியோர் குஜராத்துக்கு அடிக்கடி சென்று ஆம் ஆத்மி ஆதரவாக பிரச்சாரம் செய்து வருகின்றனர். இலவச மின்சாரம், சுகாதாரத்தை மேம்படுத்துதல் மற்றும் தரமான கல்வியை வழங்குவோம் என்று பல்வேறு வாக்குறுதிகளை குஜராத் மக்களுக்கு அரவிந்த் கெஜ்ரிவால் அளித்துள்ளார்.

ஆம் ஆத்மி

ஆம் ஆத்மி கட்சி அண்மையில் குஜராத் தேர்தலுக்கான கட்சியின் முதல்வர் வேட்பாளரை தேர்ந்தெடுப்பதற்கான ஒரு பிரச்சாரத்தை தொடங்கியது. இந்நிலையில், குஜராத் சட்டப்பேரவை தேர்தலுக்கான ஆம் ஆத்மி கட்சியின் முதல்வர் வேட்பாளர் யார் என்பதை அரவிந்த் கெஜ்ரிவால் இன்று அறிவிக்க உள்ளார். எதிர்வரும் குஜராத் சட்டப்பேரவை தேர்தலில் ஆம் ஆத்மி கணிசமான இடங்களில் வெற்றி பெற்று விட்டால் அந்த கட்சிக்கு தேசிய அந்தஸ்து கிடைப்பதற்கான வாய்ப்புகள் அதிகம்.