வளர்ச்சி, பள்ளிகள், மருத்துவமனைகள் வேண்டுமானால் எங்களிடம் வர வேண்டும்.. கேரள மக்களிடம் கெஜ்ரிவால் வலியுறுத்தல்

 
அரவிந்த் கெஜ்ரிவால்

உங்களுக்கு வளர்ச்சி, பள்ளிகள், மருத்துவமனைகள் வேண்டுமானால் நீங்கள் எங்களிடம் வர வேண்டும் என கேரள மக்களிடம் அரவிந்த் கெஜ்ரிவால் வலியுறுத்தினார்.

டெல்லி மற்றும் பஞ்சாபில் ஆம் ஆத்மி நடைபெற்று வருகிறது. தற்போது ஆம் ஆத்மி கட்சி தேசிய கட்சியாக உருவெடுக்கும் ஆசையில் உள்ளது. இதற்காக பல்வேறு மாநிலங்களில் முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. தற்போது கேரளாவில் ஆம் ஆத்மி கட்சி கால் வைத்துள்ளது. கேரளாவின் டுவென்டி 20 கட்சியுடன் கூட்டணி அமைப்பதாக ஆம் ஆத்மி கட்சியின் அரவிந்த் கெஜ்ரிவால் அறிவித்துள்ளார். கேரள மாநிலம் கொச்சியில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பங்கேற்ற ஆம் ஆத்மி கட்சியின் தேசிய ஒருங்கிணைப்பாளர் அரவிந்த் கெஜ்ரிவால் பேசுகையில் கூறியதாவது: டெல்லியில் தடையில்லா மின்சாரம் வழங்கப்படுவதால், அங்கு இன்வெர்ட்டர் மற்றும் ஜெனரேட்டர் கடைகள் மூடப்பட்டுள்ளன. 

ஆம் ஆத்மி

கேரள மக்களுக்கு இலவச மின்சாரம் வேண்டாமா? மக்கள் அரசியல், கலவரம் மற்றும் ஊழலை விரும்பினால் மற்ற அரசியல் கட்சிகளுக்கு செல்லலாம். ஆனால் உங்களுக்கு வளர்ச்சி, பள்ளிகள், மருத்துவமனைகள் வேண்டுமானால் நீங்கள் எங்களிடம் வர வேண்டும். மற்ற கட்சிகள் கலவரம், குண்டாயிசம் செய்ய வேண்டும் என்பதற்காக உங்கள் பிள்ளைகளுக்கு கல்வி வழங்க மாட்டார்கள். கேரளாவில் எல்.டி.எப்., யூ.டி.எப்., என்.டிஏ. மற்றும் எங்கள் கூட்டணி மக்கள் நலக் கூட்டணி என 4 அரசியல் கூட்டணிகள் அமையும். கேரள கடவுளின் சொந்த நாடு. இவ்வளவு அழகான இடம், இவ்வளவு அழகான மனிதர்கள். 

வீடுகளுக்கு இலவச மின்சாரம்

10 ஆண்டுகளுக்கு முன்பு அரவிந்த் கெஜ்ரிவாலை யாருக்கும் தெரியாது. இன்று டெல்லி மற்றும் பஞ்சாபில் நமக்கு அரசுகள் உள்ளன. இதற்கெல்லாம் கடவுள்தான் காரணம். இப்போது கேரளாவில் ஆம் ஆத்மி கட்சி ஆட்சி அமைக்க  வேண்டும் என்று யார் விரும்புகிறார்கள்?. டெல்லியில் உள்ள ஒரு ஏழை தொழிலாளி குறைந்தபட்ச ஊதியம் ரூ.15 ஆயிரத்துக்கு முல் (இந்தியாவில் மிக அதிகமாக) பெறுகிறார். இதற்கு மேல், தரமான மருத்துவம், கல்வி, பெண்களுக்கான போக்குவரத்து, மின்சாரம், தண்ணீர் என அனைத்தையும் அவர் இலவசமாக பெறுகிறார். நேர்மையான ஆம் ஆத்மி அரசாங்கத்தால் இது சாத்தியம். இவ்வாறு அவர் தெரிவித்தார்.