தேசபக்தி, நேர்மை மற்றும் மனிதநேயம்.. இதுதாங்க எங்க கட்சி சித்தாந்தத்தின் தூண்கள்.. அரவிந்த் கெஜ்ரிவால்

 
அரவிந்த் கெஜ்ரிவால்

தேசபக்தி, நேர்மை மற்றும் மனிதநேயம் ஆகியவை ஆம் ஆத்மி கட்சி சித்தாந்தத்தின் தூண்கள் என்று அரவிந்த் கெஜ்ரிவால் தெரிவித்தார்.

அரவிந்த் கெஜ்ரிவால் தலைமையிலான ஆம் ஆத்மி கட்சி தொடங்கிய  குறுகிய காலத்திலேயே டெல்லியில் ஆட்சியை பிடித்தது. இதனை தொடர்ந்து ஆம் ஆத்மி கட்சி பஞ்சாப், கோவா மற்றும் உத்தரகாண்ட் உள்பட பல மாநிலங்களில் தனது தடத்தை பதித்த தொடங்கியது. அண்மையில் நடந்து முடிந்த பஞ்சாப் சட்டப்பேரவை தேர்தலில் ஆம் ஆத்மி கட்சி பெரும்பான்மையான இடங்களை கைப்பற்றி முதல் முறையாக அந்த மாநிலத்தில் முதல்வர் பகவந்த் மான் தலைமையில் ஆம் ஆத்மி அரசாங்கத்தை அமைத்தது.

பகவந்த் மான்

பஞ்சாப் தேர்தல் வெற்றி ஆம் ஆத்மி கட்சிக்கு புதிய உற்சாகத்தை கொடுத்துள்ளது. மேலும், தேசிய அளவில் காங்கிரஸ் கட்சிக்கு மாற்று நாங்கள்தான் என்று ஆம் ஆத்மி கட்சியினர் சொல்லி வருகின்றனர். இந்நிலையில், மக்கள் மத்தியில் கட்சியை கொண்டு சேர்க்கும் நோக்கில் ஆம் ஆத்மி கட்சியின் தேசிய ஒருங்கிணைப்பாளரும், டெல்லி முதல்வருமான அரவிந்த் கெஜ்ரிவால் ஆம் ஆத்மி கட்சி சித்தாந்தத்தின் தூண்கள் குறித்து தெரிவித்துள்ளார்.

ஆம் ஆத்மி

அரவிந்த் கெஜ்ரிவால் தனது டிவிட்டரில் பக்கத்தில், ஆம் ஆத்மி கட்சியின் சித்தாந்தத்தின் மூன்று தூண்கள்:
1. தேசபக்தி
2. நேர்மை
3. மனிதநேயம்
நாட்டை சிறப்பாக மாற்ற எனது கடைசி மூச்சு வரை பாடுபடுவேன் என பதிவு செய்துள்ளார்.