எனது அரசை கவிழ்க்க பா.ஜ.க.வுக்கு 40 எம்.எல்.ஏ.க்கள் தேவை, இதற்காக ரூ.800 கோடி வைத்துள்ளது.. அரவிந்த் கெஜ்ரிவால்

 
காந்தி நினைவிடத்தில் அரவிநத் கெஜ்ரிவால்

அரசை கவிழ்க்க பா.ஜ.க.வுக்கு 40 எம்.எல்.ஏ.க்கள் தேவை. இதற்காக அந்த கட்சி ரூ.800 கோடி வைத்துள்ளது என்று டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் குற்றம் சாட்டியுள்ளார்.

டெல்லி யூனியன் பிரதேச முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் நேற்று ஆம் ஆத்மி எம்.எல்.ஏ.க்களுடன் ராஜ்காட்டில் உள்ள மகாத்மா காந்தியின் நினைவிடத்துக்கு சென்று அஞ்சலி செலுத்தினார். அதன் பிறகு முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் செய்தியாளர்களிடம் பேசுகையில், சி.பி.ஐ. சோதனை முடிந்து ஒருநாள் கழித்து, முதல்வர் பதவிக்காக, கெஜ்ரிவாலுக்கு துரோகம் செய்ய சிசோடியாவை பா.ஜ.க. அணுகியது.

நாட்டில் இந்த ஒரே ஒரு பிரச்சினைதான் இருக்கு.. நடிகர் சுஷாந்த் வழக்கு குறித்து மனிஷ் சிசோடியா கிண்டல்

முதல்வர் பதவிக்கு பேராசை இல்லாத மணிஷ் சிசோடியாக கிடைத்தது அதிர்ஷ்டம். ஆம் ஆத்மி எம்.எல்.ஏ.க்கள் விற்கப்படுவதை விட சாவார்கள். எனது அரசை கவிழ்க்க பா.ஜ.க.வுக்கு 40 எம்.எல்.ஏ.க்கள் தேவை. இதற்காக அந்த கட்சி ரூ.800 கோடி வைத்துள்ளது என தெரிவித்தார். தற்போதைய அரசியல் சூழல்கள் மற்றும் டெல்லி அரசை பா.ஜ.க. கவிழ்க்க முயற்சிப்பதாகக் கூறப்படும் அறிக்கைகள் குறித்து விவாதிக்க நேற்று காலை 11 மணிக்கு தனது இல்லத்தில் ஆம் ஆத்மி எம்.எல்.ஏ.க்களின் கூட்டத்துக்குஅரவிந்த் கெஜ்ரிவால் அழைப்பு விடுத்து இருந்தார். 

பா.ஜ.க.

இந்நிலையில் சில ஆம் ஆத்மி எம்.எல்.ஏ.க்களை தொடர்பு கொள்ள முடியவில்லை என தகவல் வெளியானது. இதனையடுத்து இதன் பின்னணியில் பா.ஜ.க. இருக்கலாம் என கூறப்பட்டது. ஆனால், அரவிந்த் கெஜ்ரிவால் அழைப்பு விடுத்து இருந்த கூட்டத்தில்  ஆம் ஆத்மி எம்.எல்.ஏ.க்கள் 53 பேர் கலந்து கொண்டனர். டெல்லி துணை முதல்வர் மணிஷ் சிசோடியா, சபாநாயகர் ராம் நிவாஸ் கோயல் உள்பட 8 எம்.எல்.ஏ.க்கள் டெல்லியில் இல்லாததால் அந்த கூட்டத்தில் பங்கேற்கவில்லை. இருப்பினும் அவர்கள் வீடியோ கான்பரன்சிங் வாயிலாக கலந்து கொண்டதாக தகவல்.