அரசியல்வாதிகளால் இந்தியா வளர்ச்சியடையவில்லை... அரவிந்த் கெஜ்ரிவால் குற்றச்சாட்டு

 
அரவிந்த் கெஜ்ரிவால்

அரசியல்வாதிகளால் இந்தியா வளர்ச்சியடையவில்லை என்று டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் குற்றம் சாட்டினார்.

டெல்லி முதல்வரும், ஆம் ஆத்மி கட்சியின் தேசிய ஒருங்கிணைப்பாளருமான அரவிந்த் கெஜ்ரிவால் இன்று ஹரியானா மாநிலம் ஆம் ஆத்மி கட்சியின் மேக் இந்தியா நம்பர் 1 பிரச்சாரத்தை தொடங்குகிறார். இதனை முன்னிட்டு நேற்று அரவிந்த் கெஜ்ரிவால் டிஜிட்டல் பத்திரிகையாளர் சந்திப்பை நடத்தினார். அப்போது அரவிந்த் கெஜ்ரிவால் கூறியதாவது: புதன்கிழமை (இன்று) எனது பிறந்த இடமான ஹிசாரில் இருந்து பிரச்சாரத்தை தொடங்குவேன். நான் ஒவ்வொரு மாநிலத்திற்கும் சென்று மக்களுடன் தொடர்பில் இருப்பேன். ஆம் ஆத்மி கட்சியின் மேக் இந்தியா நம்பர் 1 பிரச்சாரத்தில் சேர விரும்புபவர்கள் 95100 01000 என்ற எண்ணுக்கு மிஸ்டு கால் கொடுங்க. 

டெல்லி அரசு பள்ளி

சுதந்திரம் அடைந்து 75 ஆ்ண்டுகள் ஆன நிலையிலும் நாம் இன்னும் பின்தங்கிய நிலையில் தான் இருக்கிறோம். இந்தியா உலகின் சிறந்த நாடாக மாற வேண்டும் என்பது 130 கோடி மக்களின் கனவாக உள்ளது. அரசியல்வாதிகளால் இந்தியா வளர்ச்சியடையவில்லை, மக்கள் ஒன்றிணைந்து குழு மற்றும் மற்றும் குடும்பமாக செயல்படாத வரை நிலைமை மாறாது. அது நடந்தால், இந்தியா உலகின் நம்பர் ஒன் நாடாக வருவதை எந்த சக்தியாலும் தடுக்க முடியாது. ஒவ்வொரு குழந்தையும் தரமான கல்வியை இலவசமாக பெறும் வரை, நாடு முன்னேற முடியாது. 

மோடி

1947ல் இந்தியா சுதந்திரமடைந்து, பல துறைகளில் முன்னேறி, அனைத்து கிராமங்களிலும் சிறந்த அரசு பள்ளிகளை அமைக்காதது தவறு.  சுதந்திரத்திற்கு பிறகு ஒவ்வொரு குழந்தையும் தரமான கல்வியை பெற்றிருந்தால், இந்தியா குறிப்பிடத்தக்க முன்னேற்றத்தை அடைந்திருக்கும். 5 ஆண்டுக்குள் நாட்டின் 10 லட்சம் அரசு பள்ளிகளை தரம் உயர்த்துவதற்கான திட்டத்தை பிரதமர் நரேந்திர மோடி அனைத்து மாநிலங்களுடனும் கலந்தாலோசித்து உருவாக்க வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.