குஜராத்தில் ஆம் ஆத்மி வாக்குறுதி எதிரொலி.. டெல்லியில் இலவச மின்சாரத்தை நிறுத்த பா.ஜ.க. விரும்புகிறது... கெஜ்ரிவால்

 
அரவிந்த் கெஜ்ரிவால்

டெல்லியில் இலவச மின்சாரத்தை நிறுத்த பா.ஜ.க. விரும்புகிறது என முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் குற்றம் சாட்டினார்.

டெல்லி யூனியின் பிரதேசத்தில் முதல்வர் கெஜ்ரிவால் தலைமையில் ஆம் ஆத்மி நடைபெற்று வருகிறது. இந்நிலையில் பி.எஸ்.இ.எஸ். டிஸ்காம்களுக்கு ஆம் ஆத்மி அரசு வழங்கிய மின் மானியத்தில் உள்ள முறைகேடுகள் மற்றும் முரண்பாடுகள் குறித்து விசாரிக்குமாறு டெல்லி துணை நிலை கவர்னர் வினய் குமார் சக்சேனா கடந்த செவ்வாய்க்கிழமையன்று தலைமை செயலாளருக்கு உத்தரவிட்டார். மேலும், 7 நாட்களில் அறிக்கை தாக்கல் செய்யும்படி உத்தரவிட்டார்.

வினய் குமார் சக்சேனா

ஆம் ஆத்மி அரசின் மின் மானிய திட்டம் குறித்து விசாரணை நடத்த டெல்லி துணை நிலை கவர்னர் வினய் குமார் சக்சேனா உத்தரவிட்டதையடுத்து, டெல்லி முதல்வரும், ஆம் ஆத்மி கட்சியின் தேசிய ஒருங்கிணைப்பாளருமான அரவிந்த் கெஜ்ரிவால் பா.ஜ.க.வை கடுமையாக சாடினார். அரவிந்த் கெஜ்ரிவால் டிவிட்டரில், ஆம் ஆத்மியின் இலவச மின்சார உத்தரவாதத்தை குஜராத் மிகவும் விரும்புகிறது. அதனால்தான் டெல்லியில் இலவச மின்சாரத்தை நிறுத்த பா.ஜ.க.  விரும்புகிறது. டெல்லி மக்களே நம்பிக்கை வையுங்கள். உங்கள் இலவச மின்சாரத்தை எந்த சூழ்நிலையிலும் நிறுத்த விடமாட்டேன். 

பா.ஜ.க.

குஜராத் மக்களே,நான் உங்களுக்கு உறுதியளிக்கிறேன். அரசு அமைந்தால் மார்ச் 1 முதல் உங்கள் மின்சாரமும் இலவசம். எல்லாவற்றும் அவ்வளவு வரி போடுகிறீர்கள். மிகவும் உயர்த்தப்பட்டது. நீங்கள் மக்களின் ரத்தத்தை உறிஞ்சுகிறீர்கள். இவ்வாறான நிலையில் எனது மக்களுக்கு மின்சாரத்தை விடுவித்து நான் அவர்களுக்கு கொஞ்சம் நிவாரணம் வழங்கினால் அதுவும் உங்களுக்கு பொறுக்க முடியவில்லையா? அதையும் நிறுத்த வேண்டுமா? இதை எந்த சூழ்நிலையிலும் அனுமதிக்க மாட்டேன் என பதிவு செய்துள்ளார்.