அரசின் நிதியிலிருந்து ஒவ்வொரு பைசாவும் பஞ்சாப் மற்றும் அதன் மக்களுக்கு செலவிடப்படும்... அரவிந்த் கெஜ்ரிவால்

 
தேவையில்லாமல் வாய் விட்டு சிங்கப்பூரிடம் வாங்கி கட்டிக்கொண்ட அரவிந்த் கெஜ்ரிவால்!

பஞ்சாப் அரசின் நிதியிலிருந்து ஒவ்வொரு பைசாவும் பஞ்சாப் மற்றும் அதன் மக்களுக்கு செலவிடப்படும் என அரவிந்த் கெஜ்ரிவால் தெரிவித்தார்.

பஞ்சாப் சட்டப்பேரவை தேர்தலில் ஆம் ஆத்மி கட்சி பெரும்பான்மை இடங்களை கைப்பற்றியதையடுத்து, அந்த மாநிலத்தில் ஆம் ஆத்மி முதல் முறையாக ஆட்சி அமைக்க உள்ளது. ஆம் ஆத்மி கட்சியின் தேசிய ஒருங்கிணைப்பாளர் அரவிந்த் கெஜ்ரிவாலும், அம்மாநில முதல்வராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள பகவத் மானும் நேற்று அம்மாநில மக்களுக்கு நன்றி தெரிவிக்கும் பொருட்டு அமிர்தரஸில் சாலை பேரணி நடத்தினர். அப்போது பொதுமக்கள் மத்தியில் அரவிந்த் கெஜ்ரிவால் உரையாற்றுகையில் கூறியதாவது: 

ஆம் ஆத்மி

இப்போது பணம் அனைத்தும் பஞ்சாப் மற்றும் அதன் மக்களுக்கு செலவிடப்படும். நாங்கள் அனைத்து வாக்குறுதிகளையும் நிறைவேற்றி ரங்கலா மற்றும் மகிழ்ச்சியான பஞ்சாபை உருவாக்குவோம். அவர் (பகவத் மான்) மிகவும் நேர்மையானவர். ஒரு நேர்மையான அரசாங்கம் அமைக்கப்படும். நீங்கள் அதிசயங்களை செய்கிறீர்கள். ஐ லவ் பஞ்சாப். எந்தவொரு ஆம் ஆத்மி கட்சி தலைவர் அல்லது எம்.எல்.ஏ. தவறுகளில் ஈடுபட்டால் அவர்கள் சிறையில் அடைக்கப்படுவார்கள்.

பகவத் மான்

அரசின் நிதியில் இருந்து ஒவ்வொரு பைசாவும் மாநில மக்களுக்காக செலவிடப்படும். இவ்வாறு அவர் தெரிவித்தார். பஞ்சாப் முதல்வராக பொறுப்பேற்க உள்ள பகவத் மான் நேற்று செய்தியாளர்களிடம் பேசுகையில், பஞ்சாப் அரசு அலுவலகங்களில் இனி முதல்வரின் படங்கள் இருக்காது. ஆனால் ஷாஹீத் பகத் சிங் மற்றும் பாபாசாகேப் அம்பேத்கர் படங்கள் இருக்கும் என்று தெரிவித்து குறிப்பிடத்தக்கது.