பிரதமர் மோடி என் வீட்டுக்கு சி.பி.ஐ. அனுப்பி சோதனை செய்தார். அதிகாரிகள் என் படுக்கையறைக்குள் நுழைந்தனர்.. கெஜ்ரிவால்

 
அரவிந்த் கெஜ்ரிவால்

பிரதமர் மோடி என் வீட்டுக்கு சி.பி.ஐ. அனுப்பி சோதனை செய்தார். அதிகாரிகள் என் படுக்கையறைக்குள் நுழைந்தனர் என அரவிந்த் கெஜ்ரிவால் குற்றம் சாட்டினார்.

அரவிந்த் கெஜ்ரிவால் தலைமையிலான ஆம் ஆத்மி கட்சி டெல்லியை தொடர்ந்து பஞ்சாபிலும் ஆட்சியை பிடித்துள்ளது. இதனை தொடர்ந்து மற்ற மாநிலங்களிலும் தடம் பதிக்க ஆம் ஆத்மி கட்சி விரும்புகிறது. தற்போது அதற்கான வேலைகளில் கெஜ்ரிவால் தீவிரமாக இறங்கியுள்ளார். அடுத்த ஆண்டு கர்நாடகாவில் சட்டப்பேரவை தேர்தல் நடைபெற உள்ளது. இந்த தேர்தலை மனதில் வைத்து அரவிந்த் கெஜ்ரிவால் கர்நாடகாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார்.

பிரதமர் மோடி

பெங்களூருவில் நடந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அரவிந்த் கெஜ்ரிவால் பேசுகையில் கூறியதாவது: பிரதமர் மோடி என் வீட்டுக்கு சி.பி.ஐ. அனுப்பி சோதனை செய்தார். அதிகாரிகள் என் படுக்கையறைக்குள் நுழைந்தனர். ஆனால் அவர்களால் எதையும் கண்டுபிடிக்க முடியவில்லை. இறுதியில் பிரதமர் மோடி எனக்கு நேர்மையான முதல்வர் என்ற சான்றிதழை வழங்கினார்.

சி.பி.ஐ.

எங்களுடையது நேர்மையான அரசு, நாங்கள் டெல்லியில் அதை உருவாக்கினோம், பின்னர் பஞ்சாபில் இப்போத கர்நாடகாவில் ஆட்சி அமைப்போம். டெல்லியில் தனியார் பள்ளிகளில் இருந்து இந்த ஆண்டு 4 லட்சம் மாணவர்கள் அரசு பள்ளிகளுக்கு வந்துள்ளனர். டெல்லியில் இரண்டு கோடி பேருக்கு மருத்துவ சிகிச்சை இலவசம். முன்பு டெல்லியில் 8 மணி நேரம் மின்வெட்டு இருந்தது, தற்போது இலவசமாக 24 மணி நேரமும் மின்சாரம் வழங்கப்படுகிறது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.