ஆம் ஆத்மி கட்சியை நசுக்க பா.ஜ.க. விரும்புவதான், சி.பி.ஐ., அமலாக்க துறை நமது தலைவர்களிடம் அனுப்பப்படுகிறது.. கெஜ்ரிவால்

 
அரவிந்த் கெஜ்ரிவால்

ஆம் ஆத்மி கட்சியை நசுக்க பா.ஜ.க. விரும்புவததால்தான், சி.பி.ஐ., அமலாக்க துறை நமது தலைவர்களிடம் அனுப்பப்படுகிறது என்று டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் குற்றம் சாட்டினார்.

ஆம் ஆத்மி கட்சியின் தேசிய மாநாட்டில் டெல்லி முதல்வரும், ஆம் ஆத்மி கட்சியின் தேசிய ஒருங்கிணைப்பாளருமான அரவிந்த் கெஜ்ரிவால் பேசுகையில் கூறியதாவது: ஒரு பக்கம் மற்ற கட்சிகளின் எம்.எல்.ஏ.க்களை பல கோடிக்கு  (பா.ஜ.க.) வாங்குகிறார்கள். மறுபுறம் ஊழலை கட்டுப்படுத்துவது பற்றி பேசத் துணிகிறாா்கள். பா.ஜ.க.வின் ஆப்ரேஷன் தோல்வியடைந்தது. அவர்கள் பஞ்சாப் மற்றும் டெல்லியில் எம்.எல்.ஏ.க்களை கவர்ந்திழுக்க முயன்றனர். ஆனால் வெற்றி பெறவில்லை. கடந்த 75 ஆண்டுகளில், அவர்கள் மிகப்பெரிய ஊழல் மிகுந்த மத்திய அரசாக உருவெடுத்துள்ளனர். 

பா.ஜ.க.

மற்ற கட்சி எம்.எல்.ஏ.க்களை தங்கள் அணியில் சேருமாறு பா.ஜ.க. மிரட்டுகிறது. இல்லையெனில் அமனதுல்லா கான் போல் நடவடிக்கைக்கு தயாராக இருங்கள். ஆம் ஆத்மி கட்சியை நசுக்க பா.ஜ.க. விரும்புவததால்தான், சி.பி.ஐ., அமலாக்க துறை நமது தலைவர்களிடம் அனுப்பப்படுகிறது. குஜராத்தில் ஆம் ஆத்மி கட்சியை ஒரங்கட்ட முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன, ஆனால் மக்கள் நம்முடன் இருக்கிறார்கள். ஆம் ஆத்மி கட்சியை ஊடகங்கள் புறக்கணிக்க வேண்டும்  இல்லையெனில் நடவடிக்கை எடுக்கப்படும் என்று பிரதமர் அலுவலகம் ஊடகங்களை மிரட்டுகிறது. ஆம் ஆத்மி கட்சிக்கு கவரேஜ் கொடுப்பதற்கு எதிராக பிரதமரின் ஆலோசகர் ஹிரேன் ஜோஷி எச்சரித்துள்ளார். 

ஆம் ஆத்மி

குஜராத்தில் எங்கள் கட்சிக்கு அதிகரித்து வரும் பிரபலத்தை பா.ஜ.க.வால் ஜீரணிக்க முடியாததால் ஆம் ஆத்மி கட்சி தலைவர்கள் மீது பொய்யான ஊழல் குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளது. ஊடகங்களை அச்சுறுத்துவதை நிறுத்துங்கள். குஜராத்தில் வரும் சட்டப்பேரவை தேர்தலில்  வெற்றி பெற்று ஆம் ஆத்மி  ஆட்சி அமைக்க போகிறது. ஒரு நேர்மையற்ற நபர்,ஊழல்வாதி மற்றும் துரோகி மட்டுமே மக்களுக்கு இலவச வழங்கி வழங்குவது நாட்டை அழிக்கும் என்று கூறுவார். நாங்கள் இலவசங்களை தொடங்கினோம். மக்களுக்கு இலவச வசதிகளை எப்படி வழங்குவது என்பதை கண்டுபிடிக்க முடியாத பா.ஜ.க. அதை எதிர்க்கிறது. ஆம் ஆத்மி கட்சியின் நேர்மையான அரசியலை, கல்வி மற்றும் சுகாதாரத் துறைகளில் பணியாற்றுவதை பா.ஜ.க.வால் ஜீரணிக்க முடியவில்லை.