இமாச்சல பிரதேசம் மற்றும் குஜராத்தில் ஆம் ஆத்மி கட்சியை கண்டு பா.ஜ.க. பயப்படுகிறது... அரவிந்த் கெஜ்ரிவால்

 
அரவிந்த் கெஜ்ரிவால்

இமாச்சல  பிரதேசம் மற்றும் குஜராத்தில் ஆம் ஆத்மி கட்சியை கண்டு பா.ஜ.க. பயப்படுகிறது என ஆம் ஆத்மி கட்சியின் தேசிய ஒருங்கிணைப்பாளர் அரவிந்த் கெஜ்ரிவால் தெரிவித்தார்.

இமாச்சல பிரதேசம் காங்ராவில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் ஆம் ஆத்மி கட்சியின் தேசிய ஒருங்கிணைப்பாளர் அரவிந்த் கெஜ்ரிவால் பேசுகையில் கூறியதாவது: இமாச்சல  பிரதேசம் மற்றும் குஜராத்தில் ஆம் ஆத்மி கட்சியை கண்டு பா.ஜ.க. பயப்படுகிறது. உண்மையில் அவர்கள் (பா.ஜ.க.) பொதுமக்களை கண்டு பயப்படுகிறார்கள், ஆம் ஆத்மி கட்சிக்கு அல்ல. இமாச்சல பிரதேசம் மற்றும் குஜராத்தில் முன்கூட்டியே தேர்தல் நடத்த பா.ஜ.க. முடிவு செய்துள்ளது. பா.ஜ.க. எப்போது தேர்தல் நடத்தினாலும் பரவாயில்லை, அதிகாரம் சாமானியர்களின் கைகளுக்கு வர வேண்டும். 

ஆம் ஆத்மி

ஆளும் பா.ஜ.க. மற்றும் காங்கிரஸில் உள்ள அனைத்து நல்ல தலைவர்களும் தங்கள் கட்சிகளை விட்டு விலகி ஆம் ஆத்மி கட்சியில் சேருமாறு கேட்டுக்கொள்கிறேன். ஆம் ஆத்மி கட்சிக்கு இந்த மாநில மக்கள் வாய்ப்பளிக்குமாறு கேட்டுக் கொள்கிறேன். இமாச்சல பிரதேச மக்கள் மற்றும் மாநில முதல்வர் ஜெய்ராம் தாக்கூர் டெல்லி வந்து அங்குள்ள பள்ளிகளை பார்வையிட வர வேண்டும். இமாச்சல பிரதேசத்தில் சமூக மற்றும் அரசியல் சூழ்நிலைகள் வேறு இல்லை. 

பா.ஜ.க.

பா.ஜ.க.வின் நோக்கம் மோசமானது, திருடுவதுதான் அவர்களின் நோக்கம். இமாச்சல பிரதேசத்தில் 125 யூனிட் மின்சாரம் இலவசம் என்று முதல்வர் ஜெய்ராம் தாக்கூர் அறிவித்தார். ஆனால் பிரதமர் மோடி மற்றும் மத்திய உள்துறை அமித் ஷா ஆகியோரிடம் பேசிய பிறகு, தேர்தல் வரை இலவசமாக்குவோம் என்றும் அதன் பிறகு அதை நிறுத்துவதாகவும் ஜெய்ராம் தாக்கூர் தெரிவித்தார். இவ்வாறு அவர் தெரிவித்தார்.