குஜராத் சட்டப்பேரவை தேர்தலில் காங்கிரஸ் கட்சிக்கு 5 இடங்கள் கூட கிடைக்காது... அரவிந்த் கெஜ்ரிவால் கணிப்பு

 
டெல்லியில் பேருந்துகளில் பெண்களுக்கு  இலவச பயணம்….. அரவிந்த் கெஜ்ரிவால் அதிரடி

குஜராத் சட்டப்பேரவை தேர்தலில்  காங்கிரஸ் கட்சிக்கு 5 இடங்கள் கூட கிடைக்காது என்று ஆம் ஆத்மி கட்சியின் தேசிய ஒருங்கிணைப்பாளர் அரவிந்த் கெஜ்ரிவால் கணித்துள்ளார்

குஜராத்தில் 182 உறுப்பினர்களை கொண்ட அம்மாநில சட்டப்பேரவைக்கு புதிய உறுப்பினர்களை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் டிசம்பர் 1 மற்றும் 5ம் தேதி என மொத்தம் 2 கட்டங்களாக நடைபெற உள்ளது. குஜராத் சட்டப்பேரவை தேர்தலில் பா.ஜ.க., காங்கிரஸ் மற்றும் ஆம் ஆத்மி என மும்முனை போட்டி நிலவும் என எதிர்பார்க்கப்படுகிறது. எதிர்வரும் குஜராத் சட்டப்பேரவை தேர்தலுக்கான பிரச்சாரத்தை 3 கட்சிகளும் மிகவும் தீவிரமாக உள்ளன.

சத்யேந்தர் ஜெயின்

இந்நிலையில், எதிர்வரும் குஜராத் சட்டப்பேரவை தேர்தலில் இருந்து ஆம் ஆத்மி விலகினால், சிறையில் உள்ள சத்யேந்தர் ஜெயினை விடுதலை செய்வதாக பா.ஜ.க. வாக்குறுதி அளித்ததாக டெல்லி முதல்வரும், ஆம் ஆத்மி கட்சியின் தேசிய ஒருங்கிணைப்பாளருமான அரவிந்த் கெஜ்ரிவால் தெரிவித்துள்ளார். இது அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நிகழ்ச்சி ஒன்றில் அரவிந்த் கெஜ்ரிவால் பேசுகையில் கூறியதாவது:  இந்த ஆண்டு இறுதியில் நடைபெறவுள்ள குஜராத் தேர்தல் போட்டியில் இருந்து ஆம் ஆத்மி விலகிக் கொண்டால் சிறையில் உள்ள டெல்லி அமைச்சர் சத்யேந்தர் ஜெயினை விடுதலை செய்வதாக பா.ஜ.க. வாக்குறுதி அளித்தது.

காங்கிரஸ்

குஜராத்தில் காங்கிரஸை யார் சீரியஸாக எடுத்துக் கொள்கிறார்கள்?. குஜராத் சட்டப்பேரவை தேர்தலில்  காங்கிரஸ் கட்சிக்கு 5 இடங்கள் கூட கிடைக்காது. நாங்கள் இரண்டாவது இடத்தில் உள்ளோம். குஜராத் மக்களுக்கு மாற்றம் தேவை. மக்கள் மாற்றத்தை விரும்பவில்லை என்றால், எங்களுக்கு இடம் கிடைத்திருக்காது. நாங்கள் 30 சதவீத வாக்குகளை பெறுகிறோம். பஞ்சாபிலும் நாங்கள் ஆட்சியை அமைத்தோம். குஜராத்திலும் வித்தியாசம் உள்ளது. குஜராத்தில் பா.ஜ.க.வின் வாக்கு வீதம் 20 சதவீதம் குறைகிறது. இது எங்களின் உள்கணிப்பு. அந்த வாக்குகள் அனைத்தும் எங்களுக்குதான் வருகிறது, காங்கிரஸூக்கு இல்லை. இவ்வாறு அவர் தெரிவித்தார்.