ஜெ. கதையை இரண்டு வரி திருக்குறளில் அடக்கிய ஆறுமுகசாமி - விளக்கத்துடன் பகிர்ந்த கஸ்தூரி

 
ஜெ

ஜெயலலிதாவுக்கே இந்த நிலைமையா? யானை மாதிரி, சிங்கம் மாதிரி இருந்த அவருக்கே இந்த நிலைமையா? என்று மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் மரணத்தின் போது பலரும் பேசினர்.  அதையேதான் ஆறுமுகசாமியும் தனது அறிக்கையில் குறிப்பிட்டிருக்கிறார்.   அவ்வளவு ஆளுமையுடன் இருந்த ஜெயலலிதாவின் முடிவு குறித்து இரண்டு வரி திருக்குறள் மூலம் விளக்கி இருக்கிறார் ஆறுமுகசாமி.  இதை நடிகை கஸ்தூரி விளக்கத்துடன் பகிர்ந்துள்ளார்.

aru

மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின்  மரணத்தில் மர்மம் உள்ளது என்று புகார்கள் எழுந்ததை அடுத்து விசாரணை நடத்த ஓய்வு பெற்ற நீதி அரசர் ஆறுமுகசாமி தலைமையில்  2017 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் விசாரணை ஆணையம் அமைக்கப்பட்டது. 

ஆறுமுகசாமி விசாரணை ஆணையம் ஜெயலலிதாவின் பாதுகாவலர்கள் , ஜெயலலிதாவின் உறவினர்கள் , சசிகலாவின் உறவினர்கள்,  ஐஏஎஸ் மற்றும் ஐபிஎஸ் அதிகாரிகள் , ஜெயலலிதாவுக்கு சிகிச்சை அளித்த மருத்துவர்கள்,  காவல்துறை உயரதிகாரிகள்,  போயஸ் கார்டனில் பணி செய்தவர்கள் என்று ஆணையம் விசாரணை நடத்தி வாக்குமூலத்தை பெற்றது.   இதன் பின்னர் 608 பக்கங்கள் கொண்ட இறுதி அறிக்கை முதல்வர் ஸ்டாலினிடம் தாக்கல் செய்யப்பட்டது.

 ஆறுமுகசாமி விசாரணை ஆணையத்தின் அறிக்கை இன்று சட்டசபையில் தாக்கல்  செய்யப்பட்டது.   அந்த அறிக்கையில் 22. 9 .2016 அன்று சுயநினைவு அற்ற நிலையில் போயஸ் கார்டன் இல்லத்தில் இருந்து அப்பல்லோவில் அனுமதிக்கப்பட்டார் ஜெயலலிதா.     ஜெயலலிதாவுக்கு அஞ்சியோ செய்வதைப் பற்றி டாக்டர் சுமின் சர்மா விளக்கி சொன்ன பின்னரும் ஆஞ்சியோ செய்யப்படவில்லை . டாக்டர் ரிச்சர்ட் பீலே ஜெயலலிதாவின் சிகிச்சைக்காக வெளிநாட்டிற்கு அழைத்துச் செல்ல தயார் என சொல்லியும் அது ஏன் நடக்கவில்லை?   போயஸ் கார்டனில் மயங்கி விழுந்து ஜெயலலிதா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த பிந்தைய நிகழ்வுகள் ரகசியம்  ஆக்கப்பட்டிருக்கின்றன என்று குறிப்பிடப்பட்டிருக்கின்றன.

ஜ

அந்த அறிக்கையில் ஆறுமுகசாமி குறிப்பிட்டிருந்த ஒரு திருக்குறளை  நடிகை கஸ்தூரி தனது டுவிட்டர் பக்கத்தில் விளக்கத்துடன் பகிர்ந்திருக்கிறார்.

 ’’காலாழ் களரின் நரியடுங் கண்ணஞ்சா
வேலாள் முகத்த களிறு.’’

 பாகனுக்கு அடங்காததும், தன்னை எதிர்த்துப் பிடித்த வீரனைத் தன் தந்தத்தால் தாக்கித் தூக்கியதுமான ஆண்யானை, கால் புதையும் சேற்றில் சிக்கிக் கொண்டால், நரிகூட அதைக் கொன்றுவிடும்.

இதுதான் அந்த திருக்குறளுக்கு விளக்கம்.   இங்கு கரி யார்? நரி யார்? இறக்கும் வரை  அருகில் இருந்தவர்  நரிகள் என கருதுபவர்கள்  இறந்த பிறகு  இன்னும் கொத்தும்  பிணம் தின்னி கழுகுகளை அடையாளம் காண்பது முக்கியம் என்கிறார் கஸ்தூரி.