ஓபிஎஸ் அதிகாரத்திற்கு உட்பட்டது அல்ல அந்த கவசம் - செல்லூர் ராஜூ

 
se

தேவர் தங்க கவசம் யாருக்கு என்ற பிரச்சினையில் நீதிமன்றத்தில் இது தொடர்பாக வழக்கு நடந்து வருகிறது.   ஓபிஎஸ் அணியும்,  இபிஎஸ் அணியும் போட்டி போட்டதால் இந்த விவகாரம் நீதிமன்றத்திற்கு சென்றிருக்கிறது .  இந்த நிலையில் தேவர் தங்க கவசத்திற்கு தனிநபர் சொந்தம் கொண்ட முடியாது என்று தெரிவித்துள்ளார் முன்னாள்  அமைச்சரும் இபிஎஸ்ஆதரவாளருமான செல்லூர் ராஜு.

eo

 மதுரையில் செல்லூர் ராஜு செய்தியாளர்களிடம் பேசிய போது இது சம்பந்தப்பட்ட கேள்விக்கு,   முத்துராமலிங்கத் தேவரின் தங்க கவசம் தனி நபருக்கு சொந்தமானது அல்ல இதற்கு முன்பு வரைக்கும் கட்சியின் பொருளாளர் என்பதற்காக ஓபிஎஸ்க்கு அதிகாரம் கொடுக்கப்பட்டது.  ஆனாலும் இது ஓபிஎஸ் என்கிற தனிநபருடையது அல்ல.   அவரது அதிகாரத்திற்கு உட்பட்டதும் கிடையாது என்றார்.

 அவர் மேலும்,   இது தொடர்பாக நீதிமன்றம் சொல்லும் உத்தரவுக்கு அதிமுக நிச்சயம் கட்டுப்படும்.   தேவரின் தங்க கவசம் வங்கி லாக்கரில் வைக்கப்பட்டிருக்கும் நிலையில் , அதற்கான விதிகளில் என்ன இருக்கிறது என்றால்,  அதிமுகவின் பொருளாளராக இருப்பவரின் கையெழுத்தை பெற வேண்டும் என்றுதான் இருக்கிறது . அதன் அடிப்படையில் பார்த்தால் எங்களிடம் தான் தேவர் கவசத்தை கொடுக்க வேண்டும் என்கின்றார்.

அதே நேரம் கடமை, கண்ணியம், கட்டுப்பாடு என்கிற அண்ணாவின் கொள்கைகளை கடைபிடிக்கும் நாங்கள் நீதிமன்ற தீர்ப்புக்கு என்றென்றும் கட்டுப்படுவோம் என்றும் கூறினார் செல்லூர் ராஜு.