மக்கள் பாவமில்லையா? காதுகள் பாவமில்லையா? : திமுக - பாஜக மோதல்

 
db

 ரபேல் வாட்சை வைத்து  பில் இருக்குதா? இல்லையா? என்று அண்ணாமலையை தொடந்து வறுத்தெடுத்து வருகிறது திமுக.   அவர் மீதான அடுத்த தாக்குதலும் ஆரம்பமாகி இருக்கிறது.  தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கோவை சுந்தராபுரம் பகுதியில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நடந்த மாற்றுத் திறனாளிகளுக்கான காது கேட்கும் கருவி மற்றும் செயற்கை கால் உள்ளிட்ட உதாரணங்கள் வழங்கும் நிகழ்ச்சியில் கலந்து கொண்டிருக்கிறார். 

sa

 அந்நிகழ்வில் பேசிய அண்ணாமலை,   காது கேட்க இயலாதோருக்கு வழங்கப்படும் சைபர் சோனி என்கிற நிறுவனத்தின் கருவி ஒவ்வொன்றும் 10 ஆயிரம் ரூபாய்க்கு மேல் இருக்கும்.   அந்த கருவியை பாஜக சார்பில் உங்களுக்கு வழங்குகின்றோம் என்று கூறி இருக்கிறார்.   ஆனால் கொடுக்கப்பட்ட அந்த கருவியில் விலை வெறும் 345 ரூபாய் என்றும் , அது சீனாவில் தயாரிக்கப்பட்டுள்ளது  என்பதும் தற்போது தெரிய வந்திருப்பதாக தகவல் பரவுகிறது.

 1999 ரூபாய் மதிப்பு கொண்ட அந்த கருவியை 83 சதவிகிதம் தள்ளுபடி போக 345 ரூபாய்க்கு விற்பனை செய்வதாக தற்போது அமேசான்  தனது பக்கத்தில் குறிப்பிடப்பட்டிருக்கிறது என்றும்,  இதை வைத்து அண்ணாமலை பொய் சொல்லி இருக்கிறார் என்றும்  திமுகவினர் விமர்சித்து வருகின்றனர்.

ரபேல் வாட்ச் விவகாரத்தில் பில் இருக்குதா? இல்லையா? என்று அண்ணாமலையை போட்டு வறுத்தெடுத்த அமைச்சர் செந்தில்பாலாஜி, ’’சத்திரபதி சிவாஜி 1967ல் சென்னை வந்தார். 37 வயதுக்குள் படித்தது 20000 புத்தகம்.  கணுக்கால் தண்ணீரில் டைட்டானிக் ட்ராமா. 9 வருட சர்வீஸில் 2 லட்சம் கேஸ்.  4 ஆடு வளர்த்து 5 லட்சம் வாட்ச்.  இன்று, ரூ.345/- மெஷின் 10,000 ரூபாய். ஐம்புலன்களிலும் பெரும் பொய்களே..’’என்று பதிவிட்டு,  #காதுகள்பாவமில்லையா என்ற ஹேஷ்டேக்கினை ஷேர் செய்திருந்தார்.

இதற்கு தமிழக பாஜக துணைத்தலைவர் நாராயணன் திருப்பதி,  ‘’ஆள் கடத்தல், நில அபகரிப்பு. பேருந்து டிக்கெட் வாங்கிய கருவியில் ஊழல். கோகுல் என்ற இளைஞரை கடத்திய வழக்கு. ஐந்து வருட அமைச்சர் பொறுப்பில் பல லட்சம் ஊழல். வேலை வாங்கி தருகிறேன் என்று லஞ்சம் மோசடி(சொன்னது இப்போதைய முதல்வர்) ஐம்புலன்களிலும் பெரும் உண்மைகளே! ’’என்று பதிவிட்டு   #மக்கள்_பாவமில்லையா என்ற ஹேஷ்டேக்கினை ஷேர் செய்திருக்கிறார்.