மீண்டும் இணைய வாய்ப்புள்ளதா? என்ற கேள்விக்கு ஓபிஎஸ் -இபிஎஸ் சொன்ன பதில்

 
oo

மீண்டும் இணைய வாய்ப்பு உள்ளதா என்று உச்சநீதிமன்றம் எழுப்பிய கேள்விக்கு எடப்பாடி பழனிச்சாமி  ஓ .பன்னீர்செல்வம் தரப்பு அளித்துள்ள பதில் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. 

 கடந்த 11ஆம் தேதி அன்று சென்னை வானகரத்தில்  நடந்த அதிமுக பொதுக்குழு கூட்டத்தில் அதிமுகவின் இடைக்கால பொதுச் செயலாளராக எடப்பாடி பழனிச்சாமி தேர்ந்தெடுக்கப்பட்டார்.  அதே நேரம் ஓ. பன்னீர்செல்வமும்  அவரது ஆதரவாளர்களும் அதிமுகவில் இருந்து நீக்கம் செய்து பொதுக்குழு கூட்டத்தில் அறிவிக்கப்பட்டது.

s

 அதிமுகவிலிருந்து தன்னை நீக்கியது செல்லாது என்று ஓபிஎஸ் சொல்லி இருந்தார்.  இது குறித்து தேர்தல் ஆணையத்திலும் ஓபிஎஸ் முறையிட்டிருந்தார்.  இதற்கிடையில் இந்த பொதுக்குழு கூட்டத்திற்கு தடைகோரி ஓபிஎஸ் தரப்பில் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டிருந்தது.  அதற்கு தடை விதிக்க மறுத்த நீதிமன்றம் சட்ட விதிகளுக்கு உட்பட்டு பொதுக்குழுவை நடத்தவில்லை என்றால் உச்ச நீதிமன்றம் தான் அந்த உத்தரவின் பாதுகாவலர் என்கிற அடிப்படையில் பரிசீலிக்க முடியுமே தவிர உயர் நீதிமன்றம் அல்ல என்று நீதிபதியே தெரிவித்து இருந்தார்.

 இதை அடுத்து ஓபிஎஸ் சார்பில் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது .  அதிமுக பொதுக் குழு கூட்டத்தில் சட்ட விதிகள் மீறப்பட்டு இருந்ததாக ஓபிஎஸ் தனது மனுவில்  கூறி இருந்தார்.  இது தொடர்பாக எடப்பாடி தரப்பிலும் அதிமுக தலைமை அலுவலகம் சார்பிலும் உச்ச நீதிமன்றத்தில் கேவியட் மனு தாக்கல் செய்யப்பட்டது.

 இந்த மனு உச்சநீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வந்தது.  விசாரணையின்போது அதிமுக பொதுக்குழு தொடர்பாக மொத்தம் எத்தனை வழக்குகள் பதிவு செய்திருக்கிறீர்கள் என்றும்,   கடந்த 11ஆம் தேதி பொதுக்குழுவில் என்ன நடந்தது என்று கேட்டார்கள் நீதிபதிகள்.   ஓபிஎஸ்சை கட்சியிலிருந்து நீக்குவது உள்ளிட்ட பல முடிவுகள் எடுக்கப்பட்டன என்று ஓபிஎஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டு இருக்கிறது.

 விசாரணையின் போது மேலும்,   ஓபிஎஸ் -எடப்பாடி பழனிச்சாமி இருவரும் மீண்டும் இணைய வாய்ப்புள்ளதா ? என்ற உச்ச நீதிமன்றத்தின் கேள்விக்கு,  அதற்கு வாய்ப்பில்லை என்று இரு தரப்பிலும் பதில் அளிக்கப்பட்டுள்ளது.