மணிஷ் சிசோடியா தனது பெயரின் எழுத்துப்பிழையை money shh என்று மாற்றிக்கொள்ள வேண்டும்.. அனுராக் தாக்கூர் தாக்கு

 
அனுராக் தாக்கூர்

மணிஷ் சிசோடியா தனது பெயரின் எழுத்துப்பிழையை money shh என்று மாற்றி கொள்ள வேண்டும் என்று டெல்லி  துணைமுதல்வரை மத்திய அமைச்சர் அனுராக் தாக்கூர் தாக்கினார்.

டெல்லியில் மதுபானக் கடைகளுக்கான உரிமம் வழங்கியதில் முறைகேடு நடைபெற்றதாக கூறி, டெல்லி துணை முதல்வர் மணிஷ் சிசோடியா, ஐ.ஏ.எஸ். அதிகாரி, மூத்த அதிகாரிகளுக்கு சொந்தமான 30 இடங்களில் நேற்று முன்தினம் சி.பி.ஐ. அதிகாரிகள் சோதனை நடத்தினர். இந்த சோதனையில் முக்கிய ஆவணங்கள் சிக்கியதாக கூறப்படுகிறது. இந்த வழக்கில் மொத்தம் 15 பேர் மீது முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டுள்ளது. அதில் முதல் நபராக மணிஷ் சிசோடியாவின் பெயர் குறிப்பிடப்பட்டுள்ளது.

நாட்டில் இந்த ஒரே ஒரு பிரச்சினைதான் இருக்கு.. நடிகர் சுஷாந்த் வழக்கு குறித்து மனிஷ் சிசோடியா கிண்டல்

டெல்லி மதுபான உரிமம் முறைகேடு தொடர்பாக பா.ஜ.க.வின் மூத்த தலைவர்களில் ஒருவரும், மத்திய அமைச்சருமான அனுராக் தாக்கூர் செய்தியாளர்கள் சந்திப்பின்போது கூறியதாவது: மணிஷ் சிசோடியா இப்போது தனது பெயரின் எழுத்துப்பிழையையும் மாற்றியிருக்கலா். இப்போது அது money shh. அவர் பணம் வசூலித்து அது குறித்து மவுனம் காக்கிறார். மது ஊழலில் நம்பர் 1 குற்றம் சாட்டப்பட்டவர் மணிஷ் சிசோடியா. ஆனால் முக்கியமானவர் அரவிந்த் கெஜ்ரிவால் (டெல்லி முதல்வர்). 

அரவிந்த் கெஜ்ரிவால்

இன்றைய (நேற்று) செய்தியாளர் சந்திப்பு அவரது ஊழலுக்கு பிறகு அவரது முகத்தின் நிறம் எப்படி மறைந்து விட்டது என்பதை தெளிவாக காட்டியது. எந்த கேள்விக்கும் அவரால் பதிலளிக்க முடியவில்லை. மணிஷ் ஜி உங்களின் மது கொள்கை சரியென்றால், அதை ஏன் திரும்ப பெற்றீர்கள்? மது வியாபாரிகளுக்கு ஏன் சாப்ட் கார்னர்?. 24 மணி நேரத்துக்குள் தேசத்தின் முன் வந்து பதில் சொல்லுமாறு அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு நான் சவால் விடுகிறேன். இவ்வாறு அவர் தெரிவித்தார்.