குஜராத்தில் மிகப்பெரிய பா.ஜ.க. அலை உள்ளது, இந்த முறை பா.ஜ.க. அனைத்து சாதனைகளையும் முறியடிக்கும்... அனுராக் தாக்கூர்

 
டிராக்டர்களில் சோபா அமைத்து விவசாயிகளுக்காக சிலர் போராடுகிறார்கள்… ராகுலை கிண்டல் செய்த அனுராக் தாக்கூர்

குஜராத்தில் மிகப்பெரிய பா.ஜ.க. அலை உள்ளது என்றும்  இந்த முறை பா.ஜ.க. கட்சி அனைத்து சாதனைகளையும் முறியடிக்கும் என்றும் மத்திய அமைச்சர் அனுராக் தாக்கூர் தெரிவித்தார். 

குஜராத் மாநிலம் வல்சாத் மாவட்டத்தில் உள்ள மால்வன் கிராமத்தில் பா.ஜ.க.வின் கவுரவ யாத்திரையில் கலந்து கொண்ட மத்திய அமைச்சர் அனுராக் தாக்கூர் பேசுகையில் கூறியதாவது: பிரதமர் மோடியின் தலைமையில்தான் இந்து சின்னங்கள் மதிக்கப்பட்டு, அயோத்தியில் ராமர் கோயில் நிஜமாக்கப்பட்டது. குஜராத்தில் மிகப்பெரிய பா.ஜ.க. அலை உள்ளது. இந்த முறை பா.ஜ.க. கட்சி அனைத்து சாதனைகளையும் முறியடிக்கும். 

மோடி

முன்பு ஒரு இத்தாலிய பெண் (சோனியா காந்தி) பிரதமரை அவமானப்படுத்தினார். இப்போது ஒரு இத்தாலியன் (குஜராத் ஆத் ஆத்மி தலைவர் கோபால் இத்தாலியா) அவரது (மோடியின்) தாயை அவமதிக்கிறார். முன்பு இந்த அவமதிப்பை குஜராத் ஏற்கவில்லை, இப்போதும் அதை ஏற்காது. குஜராத் தகுந்த பதிலடி கொடுக்கும். பிரதமர் மோடி தலைமையிலான அரசு டிஜிட்டல் வங்கி யூனிட்களை அறிமுகம் செய்தது. இது பொதுமக்களுக்கான வங்கி செயல்முறையை மேலும் எளிதாக்கும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

பா.ஜ.க.

குஜராத் மாநிலத்தில் சட்டப்பேரவைக்கு புதிய உறுப்பினர்களை தேர்ந்தெடுப்பதற்கான சட்டப்பேரவை தேர்தல் இந்த ஆண்டு இறுதியில் நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் ஆம் ஆத்மி, பா.ஜ.க., காங்கிரஸ் உள்பட அனைத்து அரசியல் கட்சிகளும் குஜராத்தில் தங்களது தேர்தல் பிரச்சாரத்தை தீவிரமாக மேற்கொண்டு வருகின்றன. இந்திய தேர்தல் ஆணையம் விரைவில் குஜராத் சட்டப்பேரவை தேர்தலுக்கான தேதியை அறிவிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.