அரவிந்த் கெஜ்ரிவால் அராஜகத்தின் அடையாளம்... மத்திய அமைச்சர் அனுராக் தாக்கூர் தாக்கு

 
டெல்லியில் பேருந்துகளில் பெண்களுக்கு  இலவச பயணம்….. அரவிந்த் கெஜ்ரிவால் அதிரடி

அரவிந்த் கெஜ்ரிவால் அராஜகத்தின் அடையாளம் என்று அவரை மத்திய அமைச்சர் அனுராக் தாக்கூர் கடுமையாக விமர்சனம் செய்துள்ளார்.

ஆம் ஆத்மி கட்சியின் தேசிய ஒருங்கிணைப்பாளரும், டெல்லி முதல்வருமான அரவிந்த் கெஜ்ரிவால் கடந்த சில தினங்களுக்கு முன் பத்திரிகையாளர் சந்திப்பின்போது, இந்திய பொருளாதாரத்தை தெய்வங்கள் ஆசீர்வாதத்துடன் மீட்டு சரியான பாதையில் கொண்டு வருவதற்கு, ரூபாய் நோட்டுகளில் ஒரு புறம் மகாத்மா காந்தியின் உருவமும், மறு புறம் விநாயகர்-லெட்சுமி தேவி உருவங்களை அச்சிட வேண்டும் என்று மத்திய அரசுக்கும், பிரதமர் நரேந்திர மோடிக்கு வேண்டுகோள் விடுக்கிறேன் என தெரிவித்தார். 

மோடி

இந்நிலையில் அரவிந்த் கெஜ்ரிவால் தனது தனது ஊழல் பற்றி விவாதிக்கப்படக்கூடாது என்பதற்காக புதிய பிரச்சாரத்தை (ரூபாய் நோட்டில் லெட்சுமி-கணபதி தெய்வங்களின் உருவம்) தூண்டுகிறார் என்று அனுராக் தாக்கூர் குற்றம் சாட்டியுள்ளார். மத்திய அமைச்சரும், பா.ஜ.க.வின் மூத்த தலைவர்களில் ஒருவருமான அனுராக் தாக்கூர் செய்தியாளர்களிடம் கூறியதாவது: ராமர் கோயிலை எதிர்த்தவர், இந்து தெய்வங்களை அவமதித்தவர், அமைச்சரை பதவி நீக்கம் செய்தவர், அரவிந்த் கெஜ்ரிவால் அராஜகத்தின் அடையாளம். 

அனுராக் தாக்கூர்

அரவிந்த் கெஜ்ரிவால் தனது ஊழல் பற்றி விவாதிக்கப்படக்கூடாது என்பதற்காக புதிய பிரச்சாரத்தை (ரூபாய் நோட்டில் லெட்சுமி-கணபதி தெய்வங்களின் உருவம்) தூண்டுகிறார். டெல்லியில் உள்ள முஸ்லிம் மதகுருக்களுக்கு ஆண்டுக்கு ரூ.18 ஆயிரம் ரூபாய் கொடுக்கிறீர்கள். அதே ரூ.18 ஆயிரத்தை பூசாரிகள், குருத்வாரா கிராந்திகள் மற்றும் பாஸ்டர்ஸ்களுக்கும் கொடுப்பீர்களா? ஏன் உங்களால் முடியவில்லை? இவ்வாறு அவர் தெரிவித்தார்.