பெண்டாட்டியைக்கூடக் கொடுத்து.. அதே புத்தகத்துல 21வது பக்கத்துல... ஆ.ராசாவுக்கு படித்துக்காட்டிய அண்ணாமலை

 
ab

 அதே புத்தகத்துல 21வது பக்கத்துல இருந்த  ஈ.வெ. ராமசாமி சொன்ன விஷயங்களை ஆ. ராசாவுக்கு படித்துக் காட்டி விட்டு,  இதை நான் சொல்லல .. ஈவெ ராமசாமி தான் சொன்னாரு . நீங்க சொன்ன மாதிரி தான் நானும் பேசுறேன் . நானாக பேசல என்று ஆ. ராசாவுக்கு பதிலடி கொடுத்திருக்கிறார் அண்ணாமலை.

 இந்து மதம் குறித்தும் இந்துக்கள் குறித்தும் தொடர்ந்து இழிவாக, தரக்குறைவாக பேசி வருகிறார் திமுக எம்பி ஆ. ராசா.  இதற்கு இந்துக்களும் பாஜகவினரும் தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.  ஆனாலும் தொடர்ந்து ஆ.ராசா பேசுவதை நிறுத்துவதில்லை. 

b

 அண்மையில் நடந்த திராவிடர் கழக கூட்டத்தில் பேசிய ஆ. ராசா,  இந்துவாக இருக்கிற வரை நீ சூத்திரன்.  சூத்திரான இருக்கும் வரை நீ விபச்சாரியின் மகன்.  இந்துவாக இருக்கிற வரை நீ தீண்டத்தகாதவன்.  எத்தனை பேர் விபச்சாரியின் மகனாக இருக்க விரும்புகிறீர்கள்? என்று கடுமையான வார்த்தைகளில் கேட்டு சர்ச்சையை ஏற்படுத்தினார் . 

இந்து மதத்திற்கு எதிராக தான் சொல்லும் கருத்துக்களை எல்லாம் சொல்லிவிட்டு இதை நான் சொல்லவில்லை.  ஈ வெ இராமசாமி சொன்னார்.  அவருடைய புத்தகத்தில் சொல்லி இருக்கிறார் என்று சொல்வதை ஆ. ராசா வழக்கமாக வைத்திருக்கிறார்.  இதே பாணியை அண்ணாமலையும் பின்பற்றி இருக்கிறார். 

 ஆ. ராசாவுக்கு கண்டனம் தெரிவித்து சென்னையில் நடந்த பாஜக ஆர்ப்பாட்டத்தில் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை பேசிய போது,   நான் ஆ. ராசாவுக்கு ஒரே ஒரு விஷயத்தை மட்டும் கேட்க கடமைப்பட்டிருக்கிறேன்.   நீங்கள் பேசுகிற அனைத்தும் கூட ஈவெ ராமசாமி சொன்னார், ஈவே ராமசாமி புத்தகத்தில் உள்ளது , ராமசாமி புத்தகம் மரண சாசனம்,  ஈவெ ராமசாமி இறுதி பேருரையில் இருக்கிறது என்று நீங்கள் ஒரு புத்தகத்தை காட்டினீர்கள்.

a

 அதே புத்தகத்துல 21 ஆம் பக்கத்துல  இருக்கும் சில விஷயங்களை ஆ.ராசாவுக்கு படித்துக் காட்டுகிறேன்.  அதையும் ஏற்றுக் கொள்கிறீர்களா என்பதை நீங்கள் எனக்கு சொல்ல வேண்டும்.  இப்போது ஈ வெ ராமசாமி சொல்லி இருப்பதை படிக்கிறேன் பாருங்கள் ...

நாதி இல்லையே சொல்கிறதற்கு.. நாதி இல்லையே சிந்திக்க நாதி இல்லையே.. ஒரு ஓட்டுக்கு என்னென்ன கொடுக்கிறான்.. பெண்டாட்டியை தவிர மத்தது எல்லாத்தையும் கொடுக்கிறான் ஓட்டு வாங்குவதற்கு.  இதற்கு கவலையே படமாட்டேன் என்கிறானே.. யாரது,  நம்ம முன்னேற்றக் கழகத்தின் காரன் தான்.  மற்றவனை எல்லாம் ..என்னை எல்லாம் வைவான்.. இவனுக்கு ஏன் இதுவெல்லாம் கேடு வந்துச்சு... இந்த முன்னேற்றக்காரனுக்கு.  

bj

இந்த வேலையை ஏன் பண்ணிக்கிட்டு இருக்கிறான் அவனுக்கு ஓட்டு தான் தெரியுது.. அவன் பெண்டாட்டி பிள்ளைகளை பற்றி அவனுக்கு கவலை இல்லை.  இன்னும் கொஞ்ச நாள் போனால் இது வழக்கத்தில் வந்து விடும் என்று நம்புகிறான்.   பொண்டாட்டியை கூட கொடுத்து.. வாங்குகிறார் போல.. ஏனென்றால் அந்தப் பதவி அவ்வளவு உயர்வா போச்சு என்று பக்கம் 21 நீங்கள் சொன்ன ஈவெரா நீங்கள் காட்டிய அதே புத்தகத்தில் எழுதி இருக்கிறார் என்று திமுகவை பற்றி பெரியார் எழுதி இருப்பதை படித்துக்காட்டிய அண்ணாமலை,   இது நீங்க சொன்ன அதே மாதிரி தான் நானும் பேசுகிறேன்.  நானாக இதை சொல்ல ஈ வெ. ராமசாமி தான் சொன்னாரு என்று பேசி பதிலடி கொடுத்திருக்கிறார் அண்ணாமலை .