பாஜக ஆளும் மாநிலங்களில் மலிவாக பெட்ரோல், டீசல் போட்டுக்கொள்ளுங்கள்! ராகுலுக்கு அண்ணாமலை அட்வைஸ்

 
annamalai

திமுக உட்பட உங்கள் அனைத்து கூட்டணி கட்சிகளையும் நீங்கள் சந்திக்கும்போது அவர்களை மாநிலங்களில் பெட்ரோல் மற்றும் டீசல் மீது விதிக்கும் வரையை குறைக்குமாறு கூறுங்கள் என ராகுல்காந்திக்கு பாஜக மாநில தலைவர் அண்ணாமலை அறிவுறுத்தியுள்ளார். 

இன்னைக்கு புதுச்சேரி.. நாளை தமிழ்நாடு.. பார்ப்பீங்க ராகுல்.. அண்ணாமலை சூடான  பதிலடி.! |

இதுகுறித்து அண்ணாமலை வெளியிட்டுள்ள அறிக்கையில், “இந்தியாவுக்கு வருகை தந்த ராகுல் காந்தியின் உள்நாட்டு சுற்றுப்பயணம் இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியை சேர்ந்த திரு . ராகுல் காந்தி அவர்கள் பாரத் ஜோடோ யாத்திரை என்ற பெயரில் ஒரு சுற்று பயணத்தை நாளை முதல் மேற்கொள்ள உள்ளார் . இந்த சுற்று பயணம் மூலமாவது எட்டு ஆண்டுகளில் மாண்புமிகு பாரத பிரதமர் திரு . நரேந்திர மோடி அவர்களின் தலைமையில் நமது நாடு அடைந்த வளர்ச்சியை பற்றி அறிந்து கொள்ளட்டும் . நான்காவது தலைமுறையாக அரசியலில் இருக்கும் திரு . ராகுல் காந்தி , அவரின் முன்னோர்கள் 65 ஆண்டுகளாக ' இந்தியாவால் முடியாது ' என்ற எண்ணத்தை ஆழமாக விதைத்து இருந்தாலும் , அதை முறியடித்து சுயசார்பை நோக்கி வேகமாக நகர்ந்து வருகிறது நமது நாடு . மேலும் நமது நாடு விரைவில் உலகத்தின் விஸ்வகுரு என்ற அந்தஸ்தையும் அடையும் . 

இதை கண்டு திரு . ராகுல் காந்தி அவர்கள் பெருமை கொள்வார் என்று நம்புகிறோம் . சுயசார்பு இந்தியாவின் சாதனைகளை குறிப்பிட வேண்டும் என்றால் : அமெரிக்கன் எக்ஸ்பிரஸ் நடத்திய ஒரு கணக்கெடுப்பு , 83 % சிறு , குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் ( MSMEs ) " Make in India ” திட்டத்தின் மூலம் பயனடைந்ததாக தெரிவித்தது . திரு . ராகுல் காந்தி அவர்களும் , அவரது கட்சியினரும் சிந்திக்க வேண்டியது என்னவென்றால் , இதே திட்டத்தை தான் அவர்கள் உதாசினப்படுத்தி , விமர்சித்தனர் . 2015 ஆம் ஆண்டு இந்தியாவில் $ 1 பில்லியன் மதிப்பிலான யுனிகார்ன் நிறுவனங்கள் வெறும் எட்டு இருந்த நிலையில் , தற்போது 103 க்கும் மேற்பட்ட யுனிகார்ன் நிறுவனங்கள் இந்தியாவில் உள்ளன . இந்த நிறுவனங்களின் அலுவலகங்களை தாங்கள் பார்வையிட்டால் இந்தியாவின் தொழில் வளர்ச்சியை பற்றிய ஒரு புரிதல் உங்களுக்கு கிடைக்கும் . HOU இது மட்டுமின்றி , டிஜிட்டல் பரிவர்த்தனை , சாலைகள் மேம்பாடு என மத்திய பாஜக அரசின் பல்வேறு திட்டங்களின் மூலம் கிராமப்புறங்களில் ஏற்பட்டுள்ள பொருளாதார புரட்சி திரு . ராகுல் காந்தி அவர்களை வியப்பில் ஆழ்த்தும் என்பதில் எங்களுக்கு எந்த ஒரு சந்தேகமும் இல்லை.

இதற்கான ஒரு உதாரணம் , சென்ற ஆகஸ்ட் , 2022 மாதத்தில் மட்டும் யூ.பி.ஐ மூலம் ரூபாய் 10.72 லட்சம் கோடி ரூபாய் பரிவர்த்தனை ஆகியுள்ளது . இந்தியாவில் தற்போது 26 கோடி யூ.பி.ஐ தனிப்பட்ட பயன்பாட்டாளர்கள் உள்ளனர் . ஒரு ரூபாயில் வெறும் 15 பைசாக்கள் மட்டுமே பயனாளர்களை சென்று சேர்கிறது என்று 1985 ஆம் ஆண்டு முன்னாள் பிரதமர் திரு . ராஜீவ் காந்தி அவர்கள் கூறியிருந்தார் . இன்று , அதை போக்கும் விதமாக பிரதமர் திரு . நரேந்திர மோடி அவர்களால் சிறப்பாக செயல்படுத்தப்பட்ட முறை தான் நேரடி பலன் பரிமாற்றம் ( DBT ) . ஜன் தன் யோஜனா மற்றும் இந்த முறையின் மூலம் அரசு ரூபாய் 2.23 லட்சம் கோடியை சேமித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது . 

annamalai criticized rahul gandhi released mkstalin book | உங்களில் ஒருவன்  புத்தகத்தை வெளியிட்ட ராகுல் காந்தி - அண்ணாமலை விமர்சனம் – News18 Tamil

நீங்கள் செல்லும் இந்த யாத்திரையில் , விவசாயிகளை சந்திக்க நேர்ந்தால் , 24 விவசாய பொருட்களுக்கு வழங்கப்படும் குறைந்தபட்ச ஆதரவு விலையை ( MSP ) பற்றி மகிழ்ச்சியாக கூறுவார்கள் . நெல்லுக்கு குறைந்தபட்ச ஆதரவு விலை எட்டு ஆண்டுகளில் 56 சதவீதம் உயர்ந்துள்ளது . மேலும் , பிரதம மந்திரி கிசான் சம்மான் நிதி திட்டத்தின் கீழ் 11.36 கோடி விவசாயிகள் எந்த ஒரு இடைத்தரகர்கள் தொந்தரவும் இல்லாமல் வருடத்திற்கு ரூபாய் 6,000 உதவித்தொகையாக பெறுகின்றனர் . முன்னாள் பிரதமர் மற்றும் அவரின் பாட்டி திருமதி . இந்திரா காந்தி அவர்களும் , முன்னாள் பிரதமர் மற்றும் அவரின் தந்தையாரும் மண்டல் குழுவின் பரிந்துரைகளை செயல்படுத்துவது என்பது , ' ஒரு புழு பெட்டியை திறப்பது போன்றது ' என்று மிகவும் தரக்குறைவாக கூறினார்கள் . நீங்கள் மக்களை சந்திக்கும் போது இதை பற்றியும் எடுத்துரைப்பீர்கள் என்று நம்புகிறோம் . மாண்புமிகு பிரதமர் உங்களின் பயணம் பாதுகாப்பாக இனிதே அமைந்திட செய்த சிலவற்றை படியிலிட விரும்புகிறோம் : 1. 94 கோடி இந்தியர்களுக்கு இரண்டு தவணை கோவிட் தடுப்பூசிகளையும் செலுத்தி உள்ளார்.

தேசிய நெடுஞ்சாலை கடந்த எட்டு ஆண்டுகளில் 50 % உயர்த்தப்பட்டுள்ளது . 3.2014 ஆம் ஆண்டு 70 மாவட்டங்களில் இடதுசாரி தீவிரவாதம் இருந்த நிலையில் , அது 2021 ஆம் ஆண்டு 46 மாவட்டங்களாக குறைந்துள்ளது . 4.2019 ஆம் ஆண்டு வரை குழாய் மூலம் தண்ணீர் வசதி வெறும் 16.9 சதவீத கிராமப்புற வீடுகளில் இருந்த நிலையில் , அது தற்போது 53 சதவீத ஆக உயர்ந்துள்ளது , ஆதலால் நீங்கள் சுத்தமான குழாய் தண்ணீரை நாடு முழுவதும் பருக முடியும் . 5.சௌபாக்யா திட்டத்தின் மூலம் 2.8 கோடி வீடுகளுக்கு மின்சார இணைப்புகள் வழங்கப்பட்டுள்ளது . கடைசியாக , திமுக உட்பட உங்கள் அனைத்து கூட்டணி கட்சிகளையும் நீங்கள் சந்திக்கும் போது அவர்களை மாநிலங்களில் பெட்ரோல் மற்றும் டீசல் மீது விதிக்கும் வரியை குறைக்க கூறுமாறு தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன் . மேலும் , நீங்கள் உங்கள் வாகனங்களுக்கு பெட்ரோல் அல்லது டீசல் நிரப்ப வேண்டுமெனில் பாஜக - ஆளும் மாநிலங்களில் மலிவான விலையில் நிரப்பிக்கொள்ளுங்கள்” எனக் குறிப்பிட்டுள்ளார்.