அதிமுக உட்கட்சி விஷயங்களில் பாஜக நுழையாது- அண்ணாமலை

 
annamalai

கோவை கெம்பட்டி காலனி பகுதியில் நடைபெற்ற இவ்வாகன துவக்க விழா நிகழ்ச்சியில், பா.ஜ.க. மாநிலத் தலைவர் அண்ணாமலை கலந்து கொண்டு துவக்கி வைத்தார். 

As AIADMK attacks BJP, saffron party president Annamalai says: 'We are 3rd  largest party of Tamil Nadu' | Cities News,The Indian Express

இதையடுத்து செய்தியாளர்களிடம் பேசிய அண்ணாமலை, “தமிழகத்தில் நடந்த பாஸ்போர்ட் ஊழல் தொடர்பாக வருகின்ற 21 ம் தேதியன்று தமிழக ஆளுநரை சந்தித்து புகார் மனு அளிக்க உள்ளோம். இவ்விவகாரத்தில் மாநில அரசு நடவடிக்கை எடுக்கவில்லை. மதுரை அவனியாபுரம் காவல் நிலையத்தில் போலி பாஸ்போர்ட்கள் வழங்கப்பட்டது குறித்து ஆதாரபூர்வமாக புகார் அளிக்க உள்ளோம். முதலமைச்சர் தேச பாதுகாப்போடு விளையாடதீர்கள். இந்த விவகாரத்தில் இதுவரை ஒரு சார்ஜ் மெமோ கூட கொடுக்கவில்லை. எந்த ஆட்சியில் நடந்து இருந்தாலும் முதலமைச்சர் முன்னுதாரணமாக நடவடிக்கை எடுக்க வேண்டும். 

செஸ் ஒலிம்பியாட் மாமல்லபுரத்தில் நடப்பது தமிழகத்திற்கு கிடைத்த பெருமை. இந்த நிகழ்ச்சிக்கு பிரதமர் மோடிக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ள நிலையில், அவர் பங்கேற்பதற்கான சாத்தியம் அதிகமாக உள்ளது. இந்த நிகழ்ச்சியை முதலமைச்சர் மிகப்பிரமாண்டமாக நடத்த வேண்டும், கல்லூரிக்குள் அரசியல் வேண்டாம் என்பது தான் எனது நிலைப்பாடு. இதுபோன்ற நிகழ்ச்சிகளை பா.ஜ.க வினர் இன்னும் கவனமாக செய்ய வேண்டும். அ.தி.மு.க உட்கட்சி விசயத்தில் பா.ஜ.க நுழையாது. பா.ஜ.க, அ.தி.மு.க உறவு தொடர்ந்து கொண்டிருக்கிறது. அனைத்து தலைவர்களிடமும் நட்பு தொடர்ந்து கொண்டிருக்கிறது. அ.தி.மு.க தலைமையை முடிவு அதிகாரம் அக்கட்சியின் தொண்டர்களுக்கும், நிர்வாகிகளுக்கும்தான் உண்டு. தலைமை விவகாரத்தில் அக்கட்சியினரின் முடிவை பா.ஜ.க ஏற்றுக் கொள்ளும்.

BJP leader Annamalai gets 'Y' Scale security - The Hindu

தமிழகத்தில் நடந்த ஊழல்கள் தொடர்பாக ஊழல் மற்றும் லஞ்ச ஒழிப்புத் துறையினரிடம் புகார் அளித்துள்ளோம்.யாரும் எங்கும் தப்பிக்க முடியாது. போலி பாஸ்போர்ட் விவகாரத்தில் யாரையோ காப்பற்ற மாநில அரசு செயல்படுகிறது. முறையாக விசாரணை இல்லையெனில், நீதிமன்றத்திற்கு செல்வோம். பொங்கல் தொகுப்பு ஊழல் குறித்து சி.பி.ஐ விசாரிக்க வேண்டும். ஆளுநரை வம்பு சண்டைக்கு இழுப்பது தான் தி.மு.க.வினரின் முழு நேர வேலை. ஆளுநர் செயல்பாட்டில் தவறு என யாரும் சொல்ல முடியாது. அவரது செயல்பாட்டை, பேச்சை தி.மு.க வினர் அரசியலாக்குகின்றனர். மக்களுக்கு தி.மு.க  அரசின் மிகப்பெரிய சலிப்பு வந்து விட்டது. அதனை திசை திருப்ப ஆளுநரை வம்புக்கு இழுத்து தி.மு.க  அரசியல் செய்கிறது. நான் தி.மு.க வினரை வசைபாடவில்லை. தி.மு.க  தான் என்னை வசைபாடுகிறது. தி.மு.க விற்கும், பா.ஜ.க விற்கும் எந்த பகைமையும் கிடையாது. கொள்கைகள் தான் வேறு. தி.மு.க வினர் செய்யும் தவறுகளை மக்கள் மன்றத்தில் எடுத்து வைக்கிறோம்” எனக் கூறினார்.