சசிகலாவை பாஜகவில் சேர்த்துக்கொள்ளமாட்டோம் - அண்ணாமலை

 
annamalai

கோவையில் செய்தியாளர்களிடம் பேசிய பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, “கோவையில்  திமுக கவுன்சிலர்கள் பதவியை ராஜினாமா செய்து விடும் அளவிற்கு கோவை மாநகராட்சி நிர்வாகம் இருக்கின்றது, தமிழகத்தில் கஞ்சா வளர்ப்பை இந்த அரசு வளர்த்து இருக்கின்றது எனவும், கஞ்சா உட்பட அனைத்து போதை பொருள் புழக்கமும் அதிகரித்துள்ளது. கஞ்சா விற்பனையாளர்களின் வருவாய் அதிகரித்துள்ளது,  டிவிட் போடுபவர்களின் மீது குண்டாஸ் போடும் காவல் துறை , கஞ்சா வியாபாரிகளின் மீது குண்டாஸ் போடுவதில்லை. மேகதாதுவில் அணை கட்ட வேண்டும் என யார் கொண்டு வந்தாலும் தமிழக அரசு எதிர்க்க வேண்டும், அதற்கு பா.ஜ.க துணை நிற்கும், அனைத்து கட்சி கூட்டத்திலும் பா.ஜ.க இதை தெளிவுபடுத்தி இருக்கின்றது.

annamalai said regarding sasikala politics | சசிகலாவின் அரசியல் வருகை -  பா.ஜ.க தலைவர் அண்ணாமலை விளக்கம் | – News18 Tamil

மேகதாதுவிற்கு குறுக்கே அணை கட்டுவதற்கு ஆரம்பத்தில் இருந்தே பா.ஜ.க எதிர்ப்பு தெரிவித்து வருகின்றது என்பதை திடீர் தலைவராக ( அன்புமணி ராமதாஸ்) சுற்றுபயணம் மேற்கொள்ளும் தலைவர் இதை புரிந்து கொள்ள வேண்டும். மேகதாதுவில் மூன்று மாநிலங்களின் ஒப்புதல் இல்லாமல் அணை கட்ட முடியாது. மேகதாது விவகாரத்தில் தமிழக மக்களின் கருத்தை தமிழக அரசு செயல்படுத்துகின்றது . அதிமுகவுடன் எதிர்கட்சிக்கு போட்டி போடும் மனப்பான்மை பா.ஜ.கவிற்கு  கிடையாது, பா.ஜ.கவை வளர்க்க நாங்கள் பாடுபடுகின்றோம். கருத்தியல் அடிப்படையில் தமிழக அரசியல் நகர்கின்றது, முக்கியமான கட்சிகள் ஒரு பாதையில் இருக்கின்றன, நாங்கள் எங்கள்  கருத்தியல் அடிப்படையில் தனியாக செயல்படுகின்றோம். எல்லா விவகாரங்களிலும் பா.ஜ.க வின் கருத்து வித்தியாசமாக இருக்கின்றது, திமுகதான் எங்களை செயல்பட வைக்கின்றது.

அதிமுகவில் இருக்கும் ஒவ்வொருவரும் அவர்கள் கட்சி நம்பர் 1 ஆக இருக்க வேண்டும் என நினைக்கின்றனர், பா.ஜ.கவும் தங்கள் கட்சி நம்பர் 1 ஆக இருக்க வேண்டும் என நினைப்பதிலும் தவறில்ல.  தனி மனிதர்கள் (சசிகலா) பா.ஜ.க கட்சியில் இணைப்பது என்ற விவகாரங்களில் கூட்டணி கட்சியான அதிமுகவின் மனது புண்படும்படி பா.ஜ.கவின் செயல்பாடு இருக்காது. தமிழக அரசில் துறை செயலாளர்களை மாற்றுவதால் எந்த பலனும் இல்லை , அமைச்சர்களை மாற்றினால் எதாவது பலன் இருக்கும் என தெரிவித்த  அண்ணாமலை , கேரளாவில் தங்க கடத்தல் வழக்கில் முதல்வர் பினராயி விஜயன் சம்மந்தப்பட்டு இருக்கின்றார். தமிழகத்தில் கம்யூனிஸ்ட் கட்சி ஒரு காலத்தில் இருத்தது, இப்போது எங்கே இருக்கின்றது. 

தமிழகத்தில் லூலூ மால் வந்தால் யார் பாதிக்கப்படுவார்கள்,  கம்யூனிட்டுகள் ஏன் லூலூ மால், ஜி ஸ்கொயர் பற்றியெல்லாம்  பேசுவதில்லை? சேகர் பாபு அரசியல் லாபத்திற்காக சிதம்பரம் தீட்சிதர் விவகாரத்தில் செயல் படுகின்றார். நீதிமன்ற தீர்ப்பு இருக்கும் போது ஏன் கோவிலுக்குள் நுழைந்தார்கள் என்பதை சேகர் பாபு விளக்க வேண்டும், தமிழகத்தில் திமுக ஆட்சிக்கு வரும் போதெல்லாம் தாய் மொழி கல்வியில் படிப்பவர்களின் எண்ணிக்கை குறைந்து வருகின்றது. பள்ளி கல்வி துறை அமைச்சர் அன்பில் மகேசை பட ரீலிஸ் நிகழ்வுகளில்தான் இருக்கின்றார். சூட்டிங் ஸ்பாட்டில் இருக்கின்றார். பள்ளிகளின் பக்கம் அவர் செல்வதில்லை. பள்ளி கல்வி துறை அமைச்சர் எப்படி இருக்க கூடாதோ அப்படி இருக்கின்றார்” என தமிழக பள்ளி கல்வித்துறை அமைச்சர் என பா.ஜ.க மாநில தலைவர் அண்ணாமலை குற்றம்சாட்டினார்.