’’அப்போது 2 ஜியால் முடிவுக்கு வந்த ஆட்சி இப்போது ஜி ஸ்கொயரால் முடிவுக்கு வரப்போகிறது’’-ஊழல் பட்டியலை வெளியிட்ட அண்ணாமலை

 
bj

 அப்போது 2ஜியால் முடிவுக்கு வந்த ஆட்சி இப்போது ஜி ஸ்கொயரால் முடிவுக்கு வரப்போகிறது என்று தெரிவித்து பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறார் அண்ணாமலை .  திமுக செய்யும் ஊழல் பட்டியல் தன்னிடம் இருக்கிறது அதை வெளியிடப் போகிறேன் என்று அவ்வப்போது சொல்லிவந்த அண்ணாமலை தற்போது  திமுக அரசின் ஊழல் பட்டியலை வெளியிட்டார். 

 ஆதாரமில்லாமல் அண்ணாமலை பேசுகிறார்.   திமுக அரசின் எந்த துறையிலும் ஊழல் நடைபெறவில்லை என்று அமைச்சர்கள் பலரும் சொல்லி வந்த நிலையில் ஆதாரத்துடன் திமுகவின் ஊழல் பட்டியலை வெளியிட்டிருக்கிறார் அண்ணாமலை.

 தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை இதுகுறித்து இன்று சென்னையில் செய்தியாளர்களை சந்தித்தார்.   அப்போது,  கர்ப்பிணி பெண்களுக்கான 8 ஊட்டச்சத்துக்கள் பொருட்கள் அடங்கிய தொகுப்பு வாங்குவதில் முறைகேடு நடந்திருக்கிறது.  இதில் 45 கோடி ரூபாய் அரசுக்கு இழப்பு ஏற்பட்டிருக்கிறது .  அதேபோல் நியூட்ரிஷியன் கிட்டில் வழங்கப்படுகின்ற இரும்பு சத்து டானிக் வாங்குவதில் 32 கோடி ரூபாய் அரசுக்கு நஷ்டம் ஏற்பட்டிருக்கிறது .  ஆக மொத்தம் 77 கோடி ரூபாய் அரசுக்கு இழப்பு ஏற்பட்டிருக்கிறது என்று ஆதாரத்துடன் அந்த ஊழலை வெளியிட்டார்.

bj

 அதன் பின்னர் அது குறித்து தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசியபோது,   திமுக அரசில் நடந்துள்ள ஊழல் குறித்து லஞ்ச ஒழிப்பு மற்றும் ஊழல் தடுப்புத் துறை தரப்பிடம் ஆதாரங்களுடன் புகார் தர இருக்கிறோம்.   லஞ்ச ஒழிப்பு மற்றும் ஊழல் தடுப்புத் துறை அந்த புகாரின் மீது நடவடிக்கை எடுக்காவிட்டால் பாஜக நீதிமன்றத்தை நாடும்.  நாங்கள் எல்லாவற்றுக்கும் தயாராக இருக்கிறோம் என்றார்.

தொடர்ந்து பேசிய அண்ணாமலை,    அண்ணாநகர் கார்த்திக், திமுக ஆடிட்டர் சண்முகசுந்தரம் ஆகியோர் அதிகாரிகளை மிரட்டி ஆவின் பொருளுக்குப் பதிலாக தனியார் பொருளை சேர்க்க செய்திருக்கிறார்கள்.   இதன் மூலம் தான் அரசுக்கு 45 கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டிருக்கிறது.   ஆவினை காட்டிலும் தரம் குறைந்த தனியார் நிறுவன டெண்டரை நிறுத்த வேண்டும் என்று வலியுறுத்தினார்.

 ஜி ஸ்கொயர் முன்னேற்ற கழகமாக சிஎம்டிஏ மாறி இருக்கிறது  என்று குற்றம்சாட்டிய அண்ணாமலை,  பொதுவாக நிலம் அப்ரூவல் ஆக 200 நாட்கள் ஆகும். ஆனால், கோவையில் 125 ஏக்கர் நிலத்திற்கு எட்டு நாட்களிலேயே டிடிசிபி மத்திய,  அரசின் ரேரா உட்பட அனைத்து அனுமதியும் கிடைத்திருக்கிறது.  முதல்வரின் உறவினர்கள் பலரும் அமைப்புகளில் வந்துவிட்டார்கள்.  

 திமுக ஆட்சிக்கு வந்தவுடன் ஆன்லைன் மூலம் மட்டுமே நிலத்துக்கு அப்ரூவல் வழங்கப்படும் என்று அரசாணையை வெளியிட்டார்கள்.   எப்போதெல்லாம் ஜி ஸ்கொயர்  ஆவணங்களை சமர்ப்பிக்கிறார்களோ அதற்கு ஒரு மணி நேரம் முன்னதாக மட்டுமே இந்த லிங்க் ஓபன் ஆகும் .  அவர்கள் ஆவணங்களை சமர்ப்பித்த பின்னர் ஒரு மணி நேரத்தில் இந்த லிங் இயங்காது.   ஜி ஸ்கொயர் க்கு மட்டுமே இந்த ஆன்லைன் லிங்க் இயங்குகிறது என்ற அதிர்ச்சியை ஏற்படுத்தினார்.

 தொடர்ந்து அதுகுறித்து,   ஜி ஸ்கொயர் பெயர் வெளியே தெரிய வந்ததால் 6 புதிய நிறுவனங்களை தொடங்கி இருக்கிறார்கள்.    முதல்வர் மருமகன் சபரீசன்,  மகள் செந்தாமரை கார்த்தி தலைமை நிலைய இயக்குனராக உள்ளனர்.  அமைச்சர் முத்துசாமி தான் இதற்கெல்லாம் பதில் சொல்ல வேண்டும் என்று சொன்னவர்,  அப்போது 2ஜியால் முடிவுக்கு வந்த ஆட்சி இப்போது ஜி ஸ்கொயரால் முடிவுக்கு வரப்போகிறது என்றார் ஆவேசத்துடன்.