ஸ்டாலினின் சொத்து பட்டியலை வெளியிடுவேன் - அண்ணாமலை
முதல்வர் மு.க.ஸ்டாலின் சொத்து பட்டியலை வெளியிடுவேன் என தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, “எனது சொத்து கணக்கை வெளியிடும் அதே நாளில் முதலமைச்சர் முக ஸ்டாலின், திமுக அமைச்சர்கள், பினாமிகள், உறவினர்களின் சொத்து பட்டியலை வெளியிட உள்ளேன். முதலமைச்சர் முக ஸ்டாலின், தனக்கு சொந்த கார் இல்லை என தேர்தல் ஆணையத்தில் சொன்னார். எந்த கார் வைத்துள்ளார் என்பதை சொல்வோம். ஏப்ரல் முதல்வாரத்தில் அனைத்து பில்களும் வெளியிடப்படும். அதிகாரத்தில் இருப்பவர்களை கேள்வி கேட்கும் உரிமை மக்களுக்கு உண்டு. இன்று சாமானிய மக்களை ஆளுங்கட்சி கேள்வி கேட்கிறது.
இதுவரை முதலமைச்சர் உள்ளிட்ட 13 அமைச்சர்களின் சொத்து பட்டியல் தயாராகிவிட்டது. சொத்து மதிப்பு மொத்தம் 2 லட்சம் கோடி வந்திருக்கிறது. சாராய அமைச்சர் செந்தில் பாலாஜி, தனது வக்கிலுக்கு கொடுக்கும் ஒரு சிட்டிங் பணம், சாமானிய மனிதர் 10 ஆண்டுகள் சம்பாதிக்கும் தொகையாகும். எனது வாட்சுக்கு பில் மட்டும் இல்லை. 13 ஆண்டுகள் சம்பாதித்த முழு கணக்கையும் கொடுக்கிறேன். எனக்கு ரூ.18 லட்சம் முதல் ரூ.1 கோடி வரை சம்பளம் வந்துள்ளது. ரூ.13 லட்சத்துக்கு கிரெடிட் கார்டு பில் கட்டி உள்ளேன்” எனக் கூறினார்