பிரதமருடன் அரசியல் பேசவில்லை- அண்ணாமலை

 
annamalai

சென்னை ஆளுநர் மாளிகையில் தமிழக பாஜக நிர்வாகிகளுடன் பிரதமர் நரேந்திர மோடி நேற்றிரவு ஆலோசனை மேற்கொண்டார். இந்த ஆலோசனையில் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, மத்திய அமைச்சர் எல்.முருகன், எம்.எல்.ஏ நயினார் நாகேந்திரன், முன்னாள் அமைச்சர் பொன் ராதாகிருஷ்ணன் உள்ளிட்டோர் ஆலோசனையில் பங்கேற்றனர். 

ஆலோசனை குறித்து செய்தியாளர்களிடம் பேசிய அண்ணாமலை, “பிரதமருடன் அரசியல் பற்றி பேசவில்லை. அவரை சந்தித்து ஆசீர்வாதம் வாங்க வேண்டும் என சந்தித்தோம். அதுமட்டுமின்றி புதிதாக நியமிக்கப்பட்டவர்கள் அவரை சந்தித்து பேசினோம். அரசியல் பேசுவதற்கான சூழலிலே தற்போதைக்கு இல்லை. பிரதமருக்கு தமிழகத்தின் அரசியல் களச்சூழல் நன்றாகவே தெரியும். 

கடந்த முறை பிரதமர் வந்த போது முதல்வர் பேசியதற்கு எதிர்ப்பு தெரிவித்தோம். செஸ் ஒலிம்பியாட் விளம்பரத்தில் பிரதமரின் விளம்பரம் இடம்பெற வேண்டும் என்ற மதுரை உயர்நீதிமன்ற கிளை தீர்ப்பை நாங்கள் வரவேற்கிறோம். அடுத்து நடக்கும் பல நிகழ்வுகளுக்கு இந்த தீர்ப்பு ஒரு மாடலாக இருக்கும். தமிழர்களின் பாரம்பரியம் செஸ் ஒலிம்பியாட் போட்டி மூலம் வெளி கட்டப்பட்டது. செஸ் ஒலிம்பியாட் போட்டி ஒரு அற்புதமான நிகழ்ச்சி அனைவரும் பாராட்டக் கூடியது. அரசியல் சம்பந்தமாக பேசவில்லை, பிரதமரை சந்திக்க வேண்டும் என்ற காரணத்தினால் சந்திப்பு நடைபெற்றது” எனக் கூறினார்.