அண்ணாமலை உதவியாளர் சிறையிலடைப்பு

 
a

தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை உதவியாளர் கிருஷ்ணகுமார் முருகன் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.  முதல்வர் ஸ்டாலின் குறித்த சர்ச்சை போஸ்டர் விவகாரத்தில் அவர் கைது செய்யப்பட்டு இருக்கிறார்.

ச்ட்

 முதல்வர் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை உதவியாளர் கிருஷ்ணகுமார் முருகன்.  இவரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.   வடசென்னை பகுதியில் கடந்த 11ஆம் தேதி பல்வேறு தெருக்களில் முதல்வர் மு. க. ஸ்டாலினை அவதூறாக சித்தரிக்கும் வகையில் போலி பத்திரிக்கையின் பெயரில் சுவரொட்டிகள் ஒட்டப்பட்டிருந்தன .

இது தொடர்பாக சென்னை மாநகராட்சி மண்டலம் ஐந்தின் உதவி பொறியாளர் ராஜ்குமார்,  துறைமுகம் திமுக கிழக்கு பகுதி செயலாளர் ராஜசேகர் ஆகியோர் காவல் நிலையத்தில் புகார் அளித்திருந்தனர்.

 இந்த புகார்களின் அடிப்படையில் போலீசார் நடத்தி வந்த விசாரணையில் முதல்வரை அவதூறாக சித்தரித்து சுவரொட்டிகளை ஒட்டுமாறு அண்ணாமலையின் உதவியாளர் கிருஷ்ணகுமார் முருகன் சொன்னதும்,   முதல்வர் குறித்து அவதூறு பரப்புகின்ற வகையில் வாசகம், கார்ட்டூன்களை சித்தரித்து சிவகுருநாதனுக்கு அனுப்பியதும் தெரிய வந்திருக்கிறது.

ம்

 இதை அடுத்து போலீசார் கிருஷ்ணகுமார் முருகனை கைது செய்ய தேடி வந்தனர்.   தலைமறைவாக இருந்து வந்த கிருஷ்ணகுமார் முருகனை போலீசார் கைது செய்துள்ளனர்.   நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி அவரை சிறையில் அடைத்து உள்ளனர். 

 இந்த போஸ்டர் விவகாரத்தில் வேறு யாருக்கும் தொடர்பு உள்ளார் என்பது குறித்தும் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.