ஆம் ஆத்மிக்கும் மற்ற கட்சிகளுக்கும் வித்தியாசம் இல்லை, முதல்வரான பிறகு இலட்சியங்களை மறந்துவிட்டீர்கள்.. அன்னா ஹசாரே

 
மீண்டும் அன்னா ஹசாரே….ஆம் ஆத்மி அரசுக்கு எதிரான போராட்டத்தில் கலந்து கொள்ள பா.ஜ.க. அழைப்பு…

ஆம் ஆத்மி கட்சிக்கும் மற்ற கட்சிகளுக்கு வித்தியாசம் இல்லை, முதல்வரானபிறகு இலட்சியங்ளை மறந்து விட்டீர்கள் என்று டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலை அன்னா ஹசாரே கடுமையாக விமர்சனம் செய்தார்.

டெல்லியில் முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் தலைமையில் ஆம் ஆத்மி அரசாங்கத்தின் ஆட்சி நடைபெற்று வருகிறது.  இந்நிலையில் டெல்லியின் மதுபான கொள்கையில் ஊழல் நடந்ததாக கூறப்பட்டது இதனையடுத்து  டெல்லி துணை முதல்வர் மணிஷ் சிசோடியா, ஐ.ஏ.எஸ். அதிகாரி, மூத்த அதிகாரிகளுக்கு சொந்தமான 31 இடங்களில் அண்மையில் சி.பி.ஐ. அதிகாரிகள் சோதனை நடத்தினர். இந்த விவகாரம் டெல்லி அரசியலில் மட்டுமல்லாது நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில், டெல்லி மதுபான கொள்கையை குறிப்பிட்டு அரவிந்த் கெஜ்ரிவால் அரசை அன்னா கடுமையாக தாக்கியுள்ளார். 

அரவிந்த் கெஜ்ரிவால்

டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு சமூக ஆர்வலர் அன்னா ஹசாரே எழுதியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது: நீங்கள் முதல்வரானபிறகு தற்போதுதான் நான் முதல் முறையாக உங்களுக்கு கடிதம் எழுதுகிறேன். ஏனென்றால் உங்கள் அரசாங்கத்தின் மதுபான கொள்கையை பற்றிய சமீபத்திய  செய்திகளால் நான் வேதனைபடுகிறேன். உங்கள் ஸ்வராஜ் புததகத்தில் மதுபான கொள்கைகள் பற்றி இலட்சியமான விஷயங்களை எழுதியிருந்தீர்கள். அதற்கு என்னை அறிமுகம் எழுத வைத்தீர்கள். அந்த புத்தகத்தில் குடியிருப்பு  பகுதியில் அப்பகுதியில் வசிப்பவர்களின் அனுமதியின்றி மதுக்கடைகளை திறக்கக் கூடாது என்று குறிப்பிட்டு இருந்தீர்கள். ஆனால் முதல்வரான பிறகு அந்த இலட்சியங்களை மறந்துவிட்டீர்கள். 

ஆம் ஆத்மி

நீங்கள் மணிஷ் சிசோடியா மற்றும் பிறரால் உருவாக்கப்பட்ட ஆம் ஆத்மி கட்சிக்கும், பிற கட்சிகளுக்கும் இடையே எந்த வித்தியாசத்தையும் பார்க்கவில்லை.. வலுவான லோக்பால் மற்றும் ஊழலுக்கு எதிரான சட்டங்களை கொண்டு வருவதற்கு பதிலாக, மக்கள் விரோத குறிப்பாக பெண்களுக்கு எதிரான இந்த மது கொள்கையை கொண்டு வந்தீர்கள். எனது கிராமமான ராலேகான் சித்தி மற்றும் மகாராஷ்டிரா மாநிலம் மதுபான கொள்கையில் சிறந்தது. டெல்லியில் நகரின் மூலை முடுக்கெல்லாம் மதுக்கடைகள் திறக்கப்பட்டன. அதிகாரத்துக்காக பணம், பணத்துக்காக அதிகராம் என்ற வட்டத்தில் மக்கள் சிக்கியிருப்பது போல் தெரிகிறது. ஒரு பெரிய இயக்கத்தில் இருந்து உருவான கட்சிக்கு இது பொருந்தாது. இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.