மேற்கு வங்கத்தில் விசாரணையை தொடங்கினால் கோடிக்கணக்கான ஊழல்கள் வெளிவரும்... பா.ஜ.க.

 
ஊழல்

மேற்கு வங்கத்தில் விசாரணையை தொடங்கினால் கோடிக்கணக்கான ஊழல்கள் வெளிவரும் என பா.ஜ.க.வின் அனிர்பன் கங்குலி தெரிவித்தார்.

பா.ஜ.க.வின் மூத்த தலைவர்களில் ஒருவரான அனிர்பன் கங்குலி செய்தி நிறுவனம் ஒன்றுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது: கவர்னரின் கடிதத்திற்கு பதிலளிக்காத ஒரே மாநிலம் மேற்கு வங்கம். சமூக வலைதளங்களில் அவர் முடக்கப்பட்டுள்ளார். மேற்கு வங்கத்தில் விசாரணையை தொடங்கினால் கோடிக்கணக்கான ஊழல்கள் வெளிவரும். இதில் அனைத்து திரிணாமுல் காங்கிரஸ் தலைவர்களும் ஈடுபட்டுள்ளனர். 

திரிணாமுல் காங்கிரஸ்

ஆளும் குடும்பமும் (மம்தா கட்சி மற்றும் உறவினர்கள்) ஊழல்களில் ஈடுபட்டுள்ளது. அதிகாரிகளும் ஈடுபட்டுள்ளனர். காங்கிரஸ் கட்சியிலிருந்து தலைவர்கள் விலகுவது கட்சிக்கு பெரும் கவலை என அந்த மூத்த தலைவர் குலாம் நபி ஆசாத் கூறியிருப்பது, காங்கிரஸ் இனி ஒரு கட்சியாக இல்லை என்பதற்கான அறிகுறி. ஜி-23 உறுப்பினர்களாக இருந்த தலைவர்கள் புறக்கணிக்கப்படுகிறார்கள். 

அனிர்பன் கங்குலி

அவர்கள் கட்சியை விட்டு வெளியேறுகிறார்கள். ஒரு குடும்பம் மட்டுமே கட்சியை நடத்துகிறது. அவர்கள் யதார்த்தத்தை பார்க்க விரும்பவில்லை. இவ்வாறு அவர் தெரிவித்தார். கடந்த சில தினங்களுக்கு முன் 46 ஆண்டு காலமாக காங்கிரஸ் கட்சியில் இருந்து வந்த அஸ்வினி குமார் அந்த கட்சியிலிருந்து வெளியேறினார் என்பது குறிப்பிடத்தக்கது.