சந்திரபாபு நாயுடுவுக்கு பை-பை சொல்லும் நேரம் வந்து விட்டது.. ஆந்திர முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி..

 
ஆந்திர முதல்வராக பதவியேற்றார் ஜெகன் மோகன் ரெட்டி: உதயநிதியுடன் பங்கேற்ற ஸ்டாலின்!?

ஆந்திர பிரதேசத்தின் முன்னாள் முதல்வர் சந்திரபாபு நாயுடுவுக்கு பை-பை சொல்லும் நேரம் வந்து விட்டது என்று அம்மாநில முதல்வரும், ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சியின் தலைவருமான ஜெகன் மோகன் ரெட்டி தெரிவித்தார்.

தெலுங்கு தேசம் கட்சியின் தலைவரும், ஆந்திர பிரதேச முன்னாள் முதல்வருமான சந்திரபாபு நாயுடு அண்மையில், 2024 ஆந்திர பிரதேச சட்டப்பேரவை தேர்தலில் தெலுங்கு தேசம் கட்சியை வெற்றி பெறச் செய்து ஆட்சியில் அமர வைக்கவில்லை என்றால் அதுதான் எனது கடைசி தேர்தலாக இருக்கும் என்று  தெரிவித்து இருந்தார். இந்நிலையில், பாபுவுக்கு (சந்திரபாபு நாயுடு) பை-பை சொல்லும் நேரம் வந்து விட்டது என்று ஆந்திர பிரதேச முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி தெரிவித்தார்.

சந்திரசேகர ராவை மோடி மிரட்டுகிறார்: சந்திரபாபு நாயுடு குற்றச்சாட்டு

ஆந்திர பிரதேசம் ஸ்ரீகாகுளத்தில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பேசிய அம்மாநில முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி பேசுகையில் கூறியதாவது: சந்திரபாபு நாயுடு இன்றைய ராவணன். பாபுவுக்கு (சந்திரபாபு நாயுடு) பை-பை சொல்லும் நேரம் வந்து விட்டது. தங்கள் கடின உழைப்பு மற்றும் அர்ப்பணிப்பு மூலம் ஆட்சிக்கு வந்தவர்கள் என்.டி.ஆர்., எம்.ஜி.ஆர். மற்றும் ஜெகன் என்று சொல்லப்படுகிறார்கள். மறுபுறம், துரோகம் செய்து ஆட்சிக்கு வருபவர்கள் சந்திரபாபு என்று அழைக்கப்படுகிறார்கள். ஜன சேனா கட்சி தலைவரும், நடிகருமான பவன் கல்யாண், ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ்  அரசுக்கு எதிராக மக்களை தவறாக வழிநடத்தினார். 

உயிரை கொடுத்த உயிர் தொண்டர்கள் -பவன் கல்யாண் பிறந்த நாள் ,ஐந்து ரசிகர்களுக்கு இறந்த நாளானது எப்படி ?

சந்திரபாபுவின் வளர்ப்பு மகன் உத்தனத்தில் சிறுநீரக பாதிப்புக்குள்ளானவர்களை சந்தித்தார். ஆனால் மக்கள் தெரிந்து கொள்ள விரும்புவது என்னவென்றால், அவர்கள் ( தெலுங்கு தேசம் கட்சி) ஆட்சியில் இருந்தபோது, சிறுநீரக நோயாகளிகளுக்கு  நோயாளிகளுக்கு சரியாக என்ன செய்தது?. சந்திரபாபு நாயுடு ஆட்சியின்போது, தங்கள் குடும்பங்கள் பயனடைந்திருந்தால், அவரை மீண்டும் ஆட்சிக்கு கொண்டு வர மக்கள் வாக்களிக்க வேண்டும். பலன் கிடைத்ததா இல்லையா?. வாக்களிப்பதற்கான ஒரே அளவு கோலாக இது இருக்க வேண்டும். மாநிலத்தில் அரசியில் என்பது ஏமாற்றுத்தனத்தில் இருந்து பொறுப்புக்கூறலுக்கு மாற வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.