பாமக ஒரு ஜாதிக்கட்சி என்ற மாயையை உடைத்துக் கொண்டிருக்கிறோம் - அன்புமணி ராமதாஸ்

 
anbu

பாட்டாளி மக்கள் கட்சியின் புதிய தலைவராக பொறுப்பேற்றுள்ள மருத்துவர் அன்புமணி இராமதாஸ் கட்சியின் பல்வேறு அணிகள் மற்றும் துணை அமைப்புகளின் நிர்வாகிகளுடன் நாளை (29.05.2022) ஞாயிற்றுக்கிழமை காலை 11.30 மணிக்கு ஆலோசனை நடத்தவுள்ளார். பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் முன்னிலையில் இந்தக் கூட்டம் நடைபெறவுள்ளது. சென்னை தியாகராயநகர் ஜி.என்.செட்டி சாலையில் உள்ள அக்கார்ட் விடுதியில் இந்தக் கூட்டம் நடைபெறவுள்ளது.

Former Union Min Anbumani Ramadoss likely to take over PMK mantle | The  News Minute

பாமகவின் சிறப்பு பொதுக்குழு கூட்டம்,திருவேற்காட்டில் உள்ள தனியார் மண்டபத்தில் நடைபெற்றது. கூட்டத்திற்கு வந்தவர்களை பாமகவின் பொது செயலாளர் வடிவேல் ராவணன் வரவேற்று பேசினார். கட்சியின் தலைவர் ஜி.கே.மணி தலைமை தாங்கி, கட்சியை அடுத்த கட்டத்திற்கு எடுத்து செல்ல, பாட்டாளி மக்கள் புதிய தலைவராக தற்போதைய இளைஞர் அணி தலைவரான அன்புமணி ராமதாஸாக இருக்க வேண்டும் என்பதால், ஒருமனதாக பாமக பொதுக்குழு கூட்டத்தில் அன்புணி ராமதாஸ் கட்சியின் தலைவராக தேர்ந்தெடுக்கப்படுவதாக அறிவித்தார். கட்சியின் தலைவராக பொறுப்பேற்ற அன்புமணியை பாமக நிறுவனர் ராமதாஸ் கட்டித்தழுவி வாழ்த்தினார். தொடர்ந்து அவருக்கு கட்சி நிர்வாகிகள் வாழ்த்து தெரிவித்தனர்.

நிகழ்ச்சியில் பேசிய அன்புமணி ராமதாஸ், “மிகப்பெரிய பொறுப்பு தலைவர் பொறுப்பு. கட்சியின் தலைவனாக இல்லாமல் கடைக்கோடி தொண்டனாக செயல்படுவேன். தலைவர் பொறுப்பை மிக நேர்மையாக செயல்படுத்துவேன், கட்டப்பஞ்சாயத்து போன்ற செயல்களில் ஈடுபடுபவர்கள் மீது, நடவடிக்கை எடுப்பேன். 2026ல் பாமக ஆட்சி அமைக்கும்,பாமக மட்டும் தமிழகத்தில் பூரண மதுவிலக்கை கொண்டுவரும். பாமக மட்டும் தமிழகத்தில் பூரண மதுவிலக்கை கொண்டுவரும். பாமக ஜாதிக்கட்சி என்ற மாயயை உடைத்துக்கொண்டிருக்கிறோம். புதிய பொறுப்பை நேர்மையாக கொண்டு செல்வேன். தொண்டர்களும் நேர்மையாக இருக்க வேண்டும். தவறுதலாக செயல்படும் நிர்வாகிகள் நடவடிக்கை எடுக்கப்படும். கட்டப்பஞ்சாயத்து உள்ளிட்ட  எந்த புகார் வந்தாலும் கட்சி நிர்வாகிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.  மருத்துவர் ராமதாஸின் கொள்கைகளை,கோட்பாடுகளை கட்டாயம் பின்பற்றுவேன்” எனக் கூறினார்.